டெல்லி: இந்தியாவின் முன்னணி ஒயின் உற்பத்தியாளரான சூலா வினயார்ட்ஸ் நிறுவனம் இன்று அதன் பங்கு வெளியீட்டினை செய்துள்ளது.
இந்த பங்கு வெளியீடானது டிசம்பர் 12 ஆன இன்று தொடங்கியுள்ள நிலையில், டிசம்பர் 14 அன்று முடிவடையவுள்ளது. இந்த வெளியீட்டில் ஆங்கர் முதலீட்டாளர்கள் டிசம்பர் 9 அன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பங்கு வெளியீட்டில் பங்கு விலையானது 340 - 357 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் முக மதிப்பு 2 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு ஓதுக்கீடு டிசம்பர் 19 அன்றும், பங்கு சந்தையில் டிசம்பர் 22 அன்றும் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கர் முதலீட்டாளர் தரப்பு
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆங்கர் முதலீட்டாளர்கள் மூலம் 288 கோடி ரூபாய் நிதியானது திரட்டப்பட்டது. இதில் ஒரு பங்கின் விலை 357 ரூபாயாக, 80,70,158 பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
இதற்கிடையில் இந்த பங்கு வெளீயீட்டில் 42 பங்குகள் ஒரு லாட் ஆகும். ஆக 42ன் மடங்கு வாங்கலாம் எனலாம்.இந்த பங்கு வெளியீட்டின் மூலம் நிறுவனம் மொத்தம் 960.35 கோடி ரூபாய் நிதி திரட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிரே மார்கெட் நிறுவனம்
கிரே மார்கெட்டில் இப்பங்கின் விலையானது 34 ரூபாய் பிரீமிய விலையில் காணப்படுகின்றது. இந்த பங்கு விற்பனையானது ஆஃபர் ஃபார் சேல் (offers for sale ) மூலம் மட்டுமே பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் சுமார் 2.69 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இதில் 22 முதலீட்டாளர்கள் தங்கள் வசம் உள்ள பங்குகளை விற்பனை செய்ய உள்ளனர்.
யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
இந்த பங்கு வெளியீட்டில் ஐபிஓ-வின் அளவு 50% தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, 50% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15% நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சூலா நிறுவனத்தின் வருவாய் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
வருவாய் வளர்ச்சி
கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதமானது, 4539.16 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் விற்பனை மார்ஜின் விகிதமானது 69.83% அதிகரித்து, வரிக்கு பிந்தைய லாபம் 521.39 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 2240.68 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே விற்பனை மார்ஜின் 74.32% அதிகரித்துள்ளது. இதன் வரிக்கு பிந்தைய லாபம் 305.06 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
தேவை எப்படி?
இந்த ஒயின் நிறுவனம் தொடர்ந்து அதன் சொந்த பிராண்டுகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், பல வெளிநாட்டு பிராண்டுகளையும் இறக்குமதி செய்து சப்ளை செய்து வருகின்றது. தொடர்ந்து புதிய பொருட்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றது. இதற்கான தேவையும் தொடர்ந்து கணிசமாக இருந்து வருவதால், இதன் வளர்ச்சி விகிதமானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல சான்ஸ்
பொதுவாக ஐபிஓ என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படும். அந்த வகையில் சூலா வினயார்ட்ஸ் நிறுவனம் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications