இந்திய பங்குச் சந்தைகள் கடந்த செப்டம்பர் மாதம் புதிய உச்சத்தை தொட்டது. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சமான 85,978 புள்ளிகளை தொட்டது. ஆனால் அதன் பிறகு பங்குச் சந்தைகள் சரிவு காண தொடங்கியது. தற்போது சென்செக்ஸ் தனது உச்சத்தை காட்டிலும் சுமார் 10,000 புள்ளிகள் குறைந்து காணப்படுகிறது. தற்போதைய பங்குச் சந்தை நிலவரம் ஏற்ற இறக்கமாக நிலையில்லாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில், சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமீத் பகாடியா, ரூ.50க்கும் குறைவாக உள்ள 2 நிறுவன பங்குகளை வாங்கலாம் என்று முதலீட்டாளர்களுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
நாளை பங்குச் சந்தையில் பில் இட்டாலிகா லைஃப்ஸ்டைல் லிமிடெட், அவோன்மோர் கேபிட்டல் அண்ட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் லிமிடெட் ஆகிய 2 நிறுவன பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் என்று சுமீத் பகாடியா பரிந்துரை செய்துள்ளார்.

பில் இட்டாலிகா லைஃப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனம் பிளாஸ்டிக் பர்னிச்சர் மற்றும் பிற பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபத்தை காட்டி வருகிறது. குறிப்பாக, 2024 செப்டம்பர் மற்றும் டிசம்பர் காலாண்டுகளில் இந்நிறுவனம் முறையே நிகர லாபமாக ரூ.1.09 கோடி மற்றும் ரூ.1.56 கோடி ஈட்டியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.16.02ஆக இருந்தது. நாளைய வர்த்தகத்தில் இப்பங்கின் ரூ.16.02 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.17.50ஆக கணிக்கப்பட்டுள்ளது. இப்பங்குக்கான ஸ்டாப் லாஸ் ரூ.15.40ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவோன்மோர் கேபிட்டல் அண்ட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனம். இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.16.60 கோடி ஈட்டியிருந்தது. அதேசமயம், முந்தைய ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.23.26ஆக இருந்தது. நாளைய வர்த்தகத்தில் இப்பங்கினை ரூ.23.46க்கு வாங்கலாம் என்றும், இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.22.50 என்றும் சுமீத் தெரிவித்துள்ளார். மேலும் இப்பங்கின் விலை இலக்கு விலை ரூ.26 ஆக குறிப்பிட்டுள்ளார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications