இந்த 3 பங்குகளை திங்கட்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க.. சொல்வது யாருன்னு பாருங்க..!

பொதுவாக பங்குச் சந்தையில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். இருப்பினும் குறுகிய காலத்தில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் பலரும் இன்ட்ராடே வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். தினசரி வர்த்தகம் தொடங்கி அது நிறைவடைவதற்குள் பங்குகளை வாங்கி விற்பனை செய்து லாபம் சம்பாத்திக்கின்றனர். நல்ல பங்குகளை சரியான விலையில் வாங்கி, கூடுதல் விலைக்கு விற்றால் இது சாத்தியம்தான். அந்த வகையில் வரும் 24ம் தேதியன்று (திங்கட்கிழமை) வாங்க , அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட 3 பங்குகளை சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமீத் பகாடியா பரிந்துரை செய்துள்ளார்.

1.அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் லிமிடெட்
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.98 சதவீதம் உயர்ந்து ரூ.1,188.80ஆக இருந்தது. இப்பங்கினை ரூ.1,188.80 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.1,270 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.1,140. கடந்த சில வாரங்களாக இப்பங்கின் விலை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 இந்த 3 பங்குகளை திங்கட்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க.. சொல்வது யாருன்னு பாருங்க..!

2.லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட்
சிவில் கட்டுமானம் உள்பட பல்வேறு வணிகங்களில் லார்சன் அண்ட் டூப்ரோ ஈடுபட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.03 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.3,417.35ஆக இருந்தது. புதிய முதலீடுகளை கருத்தில் கொண்டவர்களுக்கு, எல் அண்ட் டியின் தற்போதைய சந்தை விலையில் வாங்குவது ஒரு சாத்தியமான விருப்பமாகும். இப்பங்கின் இலக்கு விலை ரூ.3,635 ஆகும். அதேசமயம், ரிஸ்க்கை திறம்பட நிர்வகிக்க இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.3.280ஆக கணிக்கப்பட்டுள்ளது.

3.டாடா மோட்டார்ஸ்
நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ். கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.84 சதவீதம் உயர்ந்து ரூ.702.85ஆக இருந்தது. தற்போதைய சந்தை விலையான ரூ.702.85-ல் இப்பங்கினை வாங்கலாம். அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.675ஆக உள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.750ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இன்ட்ராடே வர்த்தகர்கள் செய்பவர்கள் கட்டாயம் ஸ்டாப் லாஸ் போட்டு வர்த்தகம் செய்ய வேண்டும். கடந்த 3ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.602.20க்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+