இந்த சம்மருக்கு கூலாக வாங்க ஏற்ற 5 பங்குகள்.. நிபுணர்களின் பளிச் பரிந்துரை எது தெரியுமா?

பருவம் பார்த்து பயிர் செய் என்பார்கள் நம்மவர்கள்.. ஆனால் பருவம் பார்த்து பங்கு சந்தையிலும் முதலீடு செயலாம். இது இன்றைய காலம். ஆக அன்று நம் முன்னோர்கள் வகுத்த அதே வழியினை தான் இன்று நாமும் மாற்றி யோசி எனும் விதமாக, சற்றே யோசித்து முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம்.

வெயில் காலம் தொடங்கி விட்டாலே ஆங்காங்கே புற்றீசல் போல தள்ளு வண்டிகளில் தர்பூசணி, மோர், ராகி, கேழ்வரகு கூல் என களைக் கட்டத் தொடங்கி விடும்.

இதே நகரப்பகுதிகளில் அப்படி இல்லை. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர யோசிப்பார்கள். இன்னும் ஒரு தரப்பு ஏசி, பிரிட்ஜ், ஏர் கூலர்கள் விவசாயம் சம்பந்தமான பைப்புகள் என வாங்க கூட்டம் அலைமோதும். இன்னும் சொல்லபோனால் வெயில் காலம் தொடங்கி விட்டாலே டிவிக்களில் இந்த இது சம்பந்தமான விளம்பரங்களை அதிகம் பார்க்க முடியும்.

எந்த துறை சார்ந்த பங்குகள்?

எந்த துறை சார்ந்த பங்குகள்?


ஆக தற்போது வெய்யில் காலம் தொடங்கி விட்ட நிலையில், ஜெஃப்ரிஸ் ஒரு கூலான சூப்பரான அறிவிப்பினை கொடுத்துள்ளது. இது ஏசி, பிரிட்ஜ், விவசாய பைப்புகள், ஏர் கூலர் தயாரிப்பாளர்கள், குறிப்பாக இத்துறை சார்ந்த மிட் கேப் நிறுவனங்கள் தேவை அதிகரிப்பதை காணலாம். இதனால் இத்துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.

எவ்வளவு அதிகரிக்கலாம்?

எவ்வளவு அதிகரிக்கலாம்?

ஜெஃப்ரிஸ் அறிக்கையின் படி, மேற்கண்ட துறை சார்ந்த நிறுவனங்களின் விற்பனை என்பது 14% அதிகரிக்கலாம். இதே அவற்றின் செயல்பாட்டு லாப மார்ஜின் என்பது 110 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என கணித்துள்ளது.

அது மட்டும் அல்ல, 6 நிறுவனங்களின் பெயரையும் கூட பட்டியலிட்டுள்ளது.

6 நிறுவனங்கள் பட்டியல்

6 நிறுவனங்கள் பட்டியல்

இந்த பட்டியலில் குரோம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ், ஹேவெல்ஸ் இந்தியா, வி-கார்டு இண்டஸ்ட்ரீஸ், ஆம்பர் எண்டர்பிரைசஸ், ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களும் மார்ச் காலாண்டில் நல்ல வளர்ச்சியினை எட்டலாம் என கணித்துள்ளது.

 பெரும் பலன்

பெரும் பலன்

இந்த வெயில் காலத்தில் குரோம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ், ஹேவெல்ஸ் இந்தியா, வி-கார்டு இண்டஸ்ட்ரீஸ், ஆம்பர் எண்டர்பிரைசஸ், ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களும் பெரும் பலனை அடையலாம்.

சிறந்த பங்குகள்

சிறந்த பங்குகள்


இதில் சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் சிறந்த இரு பங்காகவும் இருக்கலாம். எனினும் நிலவி வரும் சவாலான காலகட்டத்தின் மத்தியில் ஹேவெல்ஸ், வேர்ல்பூல் இந்திய உள்ளிட்ட நிறுவனங்களின் மார்ஜின் பலவீனமாக இருந்தாலும், அவற்றை ஹோல்டு செய்யலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 வெய்யில் அதிகரிக்கும்

வெய்யில் அதிகரிக்கும்

குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு, கிழக்கு, மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் வெய்யிலின் தாக்கம் என்பது சற்று கடுமையாக இருக்கலாம். அதேசமயம் வடமேற்கு, மத்திய பகுதிகள் மற்றும் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேவை  அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

ஆக இது மேற்கொண்டு ஏசி, ஏர் கூலர், பிரிட்ஸ், விவசாயம் சம்பந்தமான பொருட்கள், பேன்கள் என பலவற்றின் தேவையை ஊக்குவிக்கலாம். குறிப்பாக ஜனவரி - மார்ச் காலாண்டில் தேவை அதிகரிக்கலாம்.

இது மேற்கொண்டு அது சம்பந்தமான நிறுவனங்களின் விற்பனை அதிகரிக்க வழிவகுக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக வளர்ச்சி என்பது அதிகரிக்கும்.

 ஹேவல்ஸ் இந்தியா

ஹேவல்ஸ் இந்தியா

இதனால் இன்றும் ஏசி, பிரிட்ஜ், பேன் விற்பனையில் 28% பங்கு வகுக்கும் நிறுவனத்தின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். இதே வீடுகளுக்கு தேவையான பம்புகளின் சந்தையிலும் 25% பங்கினை வகிக்கின்றது.

இதே ஹேவல்ஸ் இந்தியா கடந்த சில காலாண்டுகளாகவே விற்பனை அதிகரித்துள்ளதை காட்டுகின்றது. இதுவும் நடப்பு காலாண்டில் அதிகரிப்பினை காணலாம்.

வி கார்டு & வேர்ல் பூல்

வி கார்டு & வேர்ல் பூல்

வி கார்டு ஸ்டெபிலைசர்கள், பேன்கள் உள்ளிட்ட பல பொருட்களின் தேவையும் அதிகரிக்கலாம்.

இதே வேர்ல்பூலின் தேவை என்பது அதிகம் இருந்து வரும் நிலையில், அவற்றின் விற்பனையும் அதிகரிக்கலாம். குறிப்பாக வாஷிங் மெஷின் மற்றும் ஏசி விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கலாம். ஆக இது சம்பந்தமான நிறுவனங்களின் பங்கு விலையையும் இது ஊக்குவிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+