சர்ரென உயர்ந்த சன் டிவி பங்குகள்: ஒரே நாளில் 18% உயர்வு.. இந்த ஒரு செய்தி தான் காரணமா?

தென்னிந்திய சந்தையில் அசைக்க முடியாத ஒரு ஊடக நிறுவனமாக இருக்கிறது சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் (Sun TV Network Limited). இந்த நிறுவனத்தின் பங்குகள் திடீரென ஒரே நாளில் 18% வரை அதிகரித்து முதலீட்டாளர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் தனது விளையாட்டு பிரிவை (Sports Division Network) தனியாக பிரிக்க திட்டமிட்டுள்ளதாக சிஎன்பிசி செய்தி வெளியிட்டது. அதாவது ஊடகங்கள் தனியாகவும், ஐபிஎல் அணிகள் தனியாகவும் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். சன் டிவி நிறுவனத்துக்கு சொந்தமாக ஐபிஎல் கிரிக்கெட் அணியான 'சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட மூன்று விளையாட்டு அணிகள் உள்ளன. எனவே விளையாட்டு தொடர்பான வணிகங்களை சன் டிவி நிறுவனத்திலிருந்து தனி நிறுவனமாக பிரிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுக்கிறது.

சர்ரென உயர்ந்த சன் டிவி பங்குகள்: ஒரே நாளில் 18% உயர்வு.. இந்த ஒரு செய்தி தான் காரணமா?

இந்த செய்தி வெளியானது முதலே முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதனால் பலரும் ஆர்வத்தோடு சன் டிவி பங்குகளை வாங்க ஆர்வம் காட்டினர். சன் டிவி பங்கு விலை மும்பை பங்குச்சந்தையில் மற்றும் தேசிய பங்குச்சந்தையில் மளமளவென உயர்ந்து, உச்சம். காலை வர்த்தகம் தொடங்கிய போது சன் டிவி நெட்வொர்க்கின் ஒரு பங்கு விலை 555 ரூபாயாக இருந்தது.இதன் பின்னர் உயர்ந்து 663.90 ரூபாய் என்ற 52 வார கால உச்சத்தை தொட்டது. கடந்த பல வருடங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிகப்படியான ஏற்றத்தை இப்பங்கு பதிவு செய்தது.

Also Read

சன் டிவி பங்குகளுக்கான வர்த்தக அளவு வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து, கோடிக்கணக்கான பங்குகள் கைமாறின. சன் டிவியின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு மற்றும் அதன் முக்கிய தொலைக்காட்சி வணிகம் மற்றும் கிரிக்கெட் ஃபிரான்சைஸ் வணிகத்தின் உண்மையான மதிப்பு என்ன என்பது குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது.

தனித்தனியாக பிரியும் போது அதிக மதிப்பு கொண்டவையாக இவை மாறும் என்பதால் அதிகமானவர்கள் போட்டி போட்டு கொண்டு சன் டிவி பங்குகளை வாங்கினர். ஏனெனில் சன் டிவியின் கிரிக்கெட் ஃபிரான்சைஸ் வணிகம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 33% பங்களிப்பை வழங்கி வருகிறது.

Recommended For You

தற்போது சன் டிவியின் சந்தை மூலதன மதிப்பு 24,000 கோடி ரூபாயாக உள்ளது. இதில் கிரிக்கெட் வணிகம் தனியாக பிரிந்தால் அது 14,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

சன் டிவி நெட்வொர்க் பங்கு விலை 3 மாதங்களில் 20% வளர்ச்சியை கண்டுள்ளது. இந்நிறுவன பங்கில் 75% பங்குகளை பிரமோட்டர்களே கொண்டுள்ளனர். முன்னதாக மே மாதம் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக பின்னடைவை சந்தித்த செய்தி வெளியான போது சன் டிவி நிறுவன பங்கு கடும் சரிவை கண்டது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+