சன் டிவி குழுமம், தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யமாக விளங்குகிறது. 1993-ல் முரசொலி மாறனால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், கலாநிதி மாறனின் தலைமையில் 24,000 கோடி ரூபாய் மதிப்புடைய மீடியா குழுமமாக உயர்ந்துள்ளது.
சன் டிவி குழுமத்தின் கீழ் தற்போது 33 டிவி சேனல்கள், 48 எஃப்.எம். ரேடியோக்கள், மூன்று நாளிதழ்கள், மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணி உள்ளிட்ட பிரம்மிக்கவைக்கும் வெற்றி வர்த்தகங்கள் உள்ளது. சன் டிவி-க்கும் தமிழக அரசியலும் நெருங்கிய தொடர்பு உள்ளது அனைவருக்கும் தெரியும், தற்போது இக்குழுமத்தின் உயர்மட்டத்தில் புதிய பிரச்சனை வெடித்துள்ளதால் சன் டிவி பங்குகள் இன்று பெரும் சரிவை சந்தித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் சன் டிவி பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் 4 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. 10 மணியளவில் சன் டிவி பங்குகள் 3.38 சதவீதம் சரிந்து 591.70 ரூபாயாக உள்ளது, இன்று காலை வர்த்தகத்தில் இப்பங்குகள் 580 ரூபாய் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது. முதலீட்டாளர்கள் இந்த சரிவை வாய்ப்பாக பயன்படுத்தி சன் டிவி பங்குகளில் முதலீடு செய்யும் முன்பு சன்டிவி குழுமத்தில் என்ன பிரச்சனை என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குடும்பம் மற்றும் அவரது சகோதரியின் மகனான முரசொலி மாறன் குடும்பம் இணைந்து தான் சன் டிவி குழுமம் துவங்கப்பட்டது. இந்த நிலையில் முரசொலி மாறனின் மகன்களான கலாநிதி மற்றும் தயாநிதி மாறன் இடையேயான மோதல், தற்போது பொதுவெளியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மீது 2003-ல் 12 லட்சம் பங்குகளை (3,500 கோடி ரூபாய் மதிப்பு) முறைகேடாக கைப்பற்றியதாக குற்றம்சாட்டி, சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் கலாநிதி 5,926 கோடி ரூபாய் ஈவுத்தொகை மற்றும் 2024-ல் 455 கோடி ரூபாய் பெற்றதாகவும், இந்த வருவாய் பயன்படுத்தி சன் டைரக்ட், சன் பிக்சர்ஸ், மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்றவற்றை வாங்கியதாகவும் தயாநிதி குற்றம்சாட்டுகிறார்.
சன் டிவி குழுமத்தில் மாறன் குடும்பத்திற்கு, கருணாநிதி குடும்பத்திற்கு சம பங்கு இருப்பு இருக்க வேண்டும், 2003 வரையில் அப்படி தான் இருந்தது. இந்த 12 லட்சம் பங்குகளை நிர்வாக குழுவின் ஒப்புதல் இல்லாமல் கலாநிதி மாறன் தனது பெயருக்கு மாற்றிய பிறகு கலாநிதி மாறன் கட்டுப்பாட்டில் இருக்கும் பங்கு இருப்பு 60 சதவீதமாக உயர்ந்தது. இதேவேளையில் மற்ற பங்குதாரர்களின் பங்கு இருப்பு 20 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்தது.
இந்த நிலையில் தயாநிதி மாறன் சன் டிவி குழுமத்தில் 2003-க்கு முந்தைய பங்கு அமைப்பை மீட்டெடுக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இல்லையெனில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தயாநிதி எச்சரித்துள்ளார்.
மார்ச் காலாண்டு முடிவில் சன் டிவி குழுமத்தின் வரிக்கு பிந்தைய லாபத்தின் அளவு என்பது 10.4 சதவீதம் வரையில் சரிந்துள்ளதாக அறிவித்துள்ளது. 2024 ஆம் நிதியாண்டின் மார்ச் காலாண்டில் 414.94 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பெற்ற நிலையில், 2025ஆம் நிதியாண்டு மார்ச் காலாண்டில் 371.77 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் வருவாய் 961.28 கோடியில் இருந்து 940.59 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும் நிதியாண்டு அடிப்படையில் பார்க்கும் போது 2025ஆம் நிதியாண்டின் மொத்த லாபம் 1925.80 கோடி ரூபாயில் இருந்து 1703.64 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications