பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் முதலீட்டாளர்கள் நிறுவன பங்குகளில் தங்களது பணத்தை முதலீடு செயகிறார்கள். குதிரை பந்தயத்தில் ஜெயிக்க வாய்ப்புள்ள குதிரை மீது தான் பந்தயம் கட்டுவார்கள். அதுபோலத்தான் நிறுவனம் நல்ல லாபம் ஈட்டும், வர்த்தக வளர்ச்சி சிறப்பாக இருக்கும் போன்ற பல்வேறு கணிப்புகள் அடிப்படையில் நன்கு ஆராய்ந்து பார்த்துதான் முதலீட்டாளர்கள் நிறுவன பங்குகளில் முதலீடு செய்வார்கள். நிறுவனம் நல்ல லாபம் சம்பாதித்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் அந்த நிறுவன பங்குக்கு நல்ல டிமாண்ட் இருக்கும், அதன் எதிரொலியாக பங்கு விலை உயரும்.
நிறுவனம் நல்ல லாபம் ஈட்டினால் பங்கின் விலை உயரும் என்பதற்கு சன்டெக் ரியால்டி லிமிடெட் நிறுவனத்தை உதாரணமாக சொல்லலாம். கடந்த 3 மாத காலத்தில் இந்நிறுவன பங்கின் விலை 12 சதவீதம் வீழ்ச்சி கண்டு இருந்தது. இந்த சூழ்நிலையில், சன்டெக் ரியால்டி லிமிடெட் நேற்று தனத கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது. நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் கணிப்புகளை காட்டிலும் சிறப்பாக இருந்தது.

சன்டெக் ரியால்டி லிமிடெட் நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.42.50 கோடி ஈட்டியுள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.9.70 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. மேலும் கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 2.5 மடங்குக்கு மேல் வளர்ச்சி கண்டுள்ளது.
2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.161.80 கோடி ஈட்டியுள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.42.40 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம், வருவாய் மட்டுமல்ல செயல்பாட்டு திறனும் வலுவாக இருந்தது.
சன்டெக் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததால், மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.546ஐ எட்டியது. கடந்த திங்கட்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.491.05ஆக இருந்தது.
இன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தாலும், வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.41 சதவீதம் (ரூ.2) மட்டுமே உயர்ந்து ரூ.493.05ல் நிலை பெற்றது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications