இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மல்டிபேக்கர் பங்கு Suzlon Energy. நம் நாட்டின் காற்றாலை துறையில் முன்னணி நிறுவனமாக வளர்ந்து வரும் Suzlon Energy நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருப்பவர்களுக்கு விரைவில் ஜாக்பாட் கிடைக்க போகிறதாம்.
முன்னணி தரகு நிறுவனமான Centrum Broking, முதலீட்டாளர்களுக்கு Suzlon Energy நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்னும் 100% வரை உயரும் என கணிப்பு வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய காலாண்டு முடிவுகள், வலுவான ஆர்டர்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் அடிப்படையில் இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது Centrum Broking நிறுவனம்.

இந்த பங்கினை வாங்கலாம் என்ற பரிந்துரையை தொடர்வதாக அறிவித்துள்ளது. இன்று இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 35 ரூபாயாக உள்ளது இது இன்னும் 100% அதாவது 70 ரூபாய் வரை உயரும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
சுஸ்லான் நிறுவனத்தின் முக்கிய வணிகமான காற்றாலை விநியோகம் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. மொத்த வருவாயில் இது 86.5 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும்30 சதவீதமும், காலாண்டு அடிப்படையில் 32.7 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. அது தவிர மற்ற பிரிவுகளும் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
சுஸ்லான் நிறுவனம் தற்போது 6.01 கிகாவாட் (GW) அளவிலான மாபெரும் ஆர்டர் புத்தகத்தை கொண்டுள்ளது. இது அடுத்த 18 மாதங்களுக்கு நிறுவனத்திற்கு தடையற்ற வருவாயை உறுதி செய்கிறது என Centrum Broking நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் மட்டும் இந்நிறுவனம் 1.5 கிகாவாட் புதிய ஆர்டர்களை பெற்றுள்ளது.
JM Financial மற்றும் Axis Capital ஆகிய நிறுவனங்கள் தங்களின் இலக்கு விலையை முறையே ரூ. 40 மற்றும் ரூ. 42 என அறிவித்து இந்த பங்கினை Add என பரிந்துரைத்துள்ளன. இந்நிறுவன பங்கின் 52 வார உச்சபட்ச மதிப்பு 61 ரூபாய். கடந்த 5 ஆண்டுகளில் 448 % வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனம் லாபம் தந்துள்ளது. செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் இந்நிறுபனம் 4908 கோடி ரூபாய் வருவாயும், 394 கோடி ரூபாய் லாபமும் பெற்றுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

