30% சரிவிற்கு பின் ஜம்ப் கொடுத்த சுஸ்லான் எனர்ஜி.. 3 கோடிக்கும் அதிகமான பங்குகள் வர்த்தகம்..!!

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்றும் சரிவைத் தொடர்கின்றன. சந்தை சரிவை சந்தித்தாலும், சில பங்குகளில் சிறப்பான ஏற்றம் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த சுஸ்லான் எனர்ஜியின் பங்குகள் இன்று வியாழன் அன்று மிகப்பெரிய அளவில் மீண்டு வந்தது. இந்த பங்கு இன்று 5% உயர்வுடன் மேல் சுற்றில் வர்த்தகமாகிறது.

காற்றாலை தயாரித்து விற்பனை செய்யும் துறையின் முன்னணி பங்கு சுஸ்லான் எனர்ஜி செப்டம்பர் காலாண்டில் நிறுவனம் நல்ல முடிவுகளைப் பதிவு செய்தது.ஆனால், இந்தப் பங்கு கடந்த சில நாட்களாக சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் சுஸ்லான் எனர்ஜியின் பங்கு விலை 30% சரிந்துள்ளது. தற்போது இந்தப் பங்கு மீண்டும் எழுச்சி கண்டுள்ளது.

30% சரிவிற்கு பின் ஜம்ப் கொடுத்த சுஸ்லான் எனர்ஜி.. 3 கோடிக்கும் அதிகமான பங்குகள் வர்த்தகம்..!!

சுஸ்லான் பங்குகளில் ஐந்து நாள் சரிவிலிருந்து மீண்டுள்ளது. சுஸ்லானின் 3 கோடிக்கும் அதிகமான பங்குகள் ஏற்கனவே வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன. இது நாளின் இந்த கட்டத்தில் அதன் 20 நாள் சராசரியான 1 கோடி பங்குகளை விட அதிகமாகும்.

சுஸ்லான் எனர்ஜியின் பங்குகள் இன்று 5% உயர்வுடன் 56.73 ரூபாயுடன் வர்த்தகமாகிறது. பங்குகளின் தொடர்ச்சியான சரிவுக்குப் பிறகு, மீண்ட நிலையில், முதலீட்டாளர்கள் அதிகமாக இந்த பங்குகளை வாங்கி வருகின்றனர். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.77.42 ஆயிரம் கோடியாக உள்ளது. சமீபத்தில், இந்த பங்குகளை வாங்குவதன் மூலம் எஃப்ஐஐக்கள் நிறுவனத்தில் தங்கள் பங்குகளை அதிகரித்துள்ளனர்.

சுஸ்லான் பங்குகள் கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வலுவாக இருந்தபோதிலும், நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் பங்கின் விலை சரிந்தது. கடந்த 28 ஆண்டுகளாக சுஸ்லான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஈஸ்வர் சந்த் மங்கல், சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

நிறுவனம் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 95.72 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.200.20 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 102.29 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் ரூ.1,417.21 கோடியாக இருந்தது. இருந்தது இந்த ஆண்டு 47.68 சதவீதம் அதிகரித்து ரூ.2,092.99 கோடியாக உயர்ந்துள்ளதாக சுஸ்லான் தெரிவித்துள்ளது.

சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் எதிர்காலத்தில் அதன் மூலோபாய திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்காக 2025ஆம் நிதியாண்டு இறுதிக்குள் அதன் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 4.5 GW ஆக அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

செப்டம்பர் 2024க்குள் நிறுவனத்தின் உரிமையாளர்கள் நிறுவனத்தில் 13.25 சதவீத பங்குகளை வைத்திருப்பார்கள். இந்த பங்குகளில் எஃப்.ஐ.ஐ.க்கள் தங்கள் பங்குகளை அதிகப்படுத்தியுள்ளனர். செப்டம்பர் 2024 காலாண்டில் FII/FPI தங்கள் பங்குகளை 21.53% இலிருந்து 23.72% ஆக உயர்த்தியுள்ளனர்

செப்டம்பர் 2024 காலாண்டில் சுஸ்லான் எனர்ஜியில் FII/FPI முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 652லிருந்து 720 ஆக அதிகரித்துள்ளது. 2024 செப்டம்பர் காலாண்டில் மியூச்சுவல் ஃபண்டுகள் தங்களுடைய பங்குகளை 3.82% இலிருந்து 4.14% ஆக அதிகரித்தது. 2024 செப்டம்பர் காலாண்டில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் எண்ணிக்கை 23ல் இருந்து 28 ஆக அதிகரித்துள்ளது. 2024 செப்டம்பர் காலாண்டில் 3நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை 30.69% இலிருந்து 32.74% ஆக அதிகரித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+