இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வரும் காரணத்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர் புதிய முதலீட்டைக் கொண்டு ஈடு செய்ய முடியாத காரணத்தாலும் அனைத்து முன்னணி நிறுவனங்களும் பெரும் சரிவை எதிர்கொண்டு உள்ளது. இப்படியிருக்கையில் இன்றைய வர்த்தகமும் சரிவில் முடிந்தாலும் Suzlon Energy நிறுவனத்தின் பங்குகள் உயர்வில் உள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேவைகளை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற Suzlon Energy நிறுவனத்தின் பங்கு மதிப்பு செவ்வாய்க்கிழமை (மார்ச் 4, 2025) வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் Suzlon Energy நிறுவனம் கைப்பற்றிய புதிய ஒப்பந்தம் காரணமாக இப்பங்குகள் 4.12 சதவீதம் உயர்ந்து ரூ.51.49 என்ற உச்சத்தை எட்டியது.

ஜிண்டால் ரினியூவபிள்ஸின் துணை நிறுவனமான ஜிண்டால் கிரீன் விண்ட் 1 பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 204.75 மெகாவாட் திறன் கொண்ட ஆர்டரை Suzlon பெற்றது. இது ஜிண்டால் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 3வது ஆர்டராகும். இந்த ஒப்பந்தத்திற்கு முன்பு, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள ஜிண்டால் ஸ்டீலின் உற்பத்தி நிலையங்களுக்குக் காற்றாலை எரிசக்தி கட்டமைப்பு வழங்குவதற்காக Suzlon இரண்டு ஆர்டர்களைப் பெற்றிருந்தது
இதுகுறித்த அறிவிப்பு வெளியான நிலையில் சுஸ்லான் எனர்ஜி பங்குகள் 0.71 சதவீதம் உயர்ந்து 50.07 ரூபாயாக உள்ளது. காலை வர்த்தகத்தில் 51.48 ரூபாய் வரையில் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2025 ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்து சுஸ்லான் சுமார் 23 சதவீதம் வரையில் சரிந்துள்ளது என்பதை முதலீட்டாளர்கள் மறந்துவிடக்கூடாது.
புனேவை தலைமையிடமாகக் கொண்ட Suzlon Energy, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளை வழங்கும் ஒரு முக்கியமான நிறுவனமாகும், மேலும் இது Suzlon குழுமத்தின் முக்கிய அங்கமாகவும் விளங்குகிறது. Suzlon குழுமம் 17 வெவ்வேறு நாடுகளில் சுமார் 20.9 ஜிகாவாட் காற்றாலை எரிசக்தி திறன் கொண்ட மாபெரும் எனர்ஜி நிறுவனமாகும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications