இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளை வழங்கும் சுஸ்லான் குழுமம், டாடா பவர் ரெனியூவபிள் எனர்ஜியிடமிருந்து 838 மெகாவாட் சூரிய சக்தி திட்டத்திற்கான இரண்டாவது பெரிய ஆர்டரைப் பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் சுஸ்லானுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆர்டர் இதுவாகும்.
இந்த ஆர்டர், உறுதியான மற்றும் அனுப்பக்கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (FDRE) திட்டங்களின் ஒரு பகுதியாகும். முன்னதாக, NTPC கிரீன் எனர்ஜியிடமிருந்து 1,544 மெகாவாட் ஆர்டரைப் பெற்ற சுஸ்லான் குழுமத்திற்கு, இது இரண்டாவது பெரிய ஆர்டராகும். இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தில் FDRE திட்டங்களின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

சுஸ்லானின் அறிக்கையின்படி, 838 மெகாவாட் திட்டத்தில், ஒவ்வொன்றும் 3.15 மெகாவாட் திறன் கொண்ட 266 S144 காற்றாலைகள் அடங்கும். இந்தக் காற்றாலைகள் கர்நாடகாவில் (302 மெகாவாட்), மகாராஷ்டிராவில் (271 மெகாவாட்) மற்றும் தமிழ்நாட்டில் (265 மெகாவாட்) மூலோபாய ரீதியாக அமைக்கப்படவுள்ளன. SJVN மற்றும் NTPC க்கான FDRE ஏலங்களின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சுஸ்லான் குழுமத்தின் துணைத் தலைவர் கிரிஷ் தந்தி இதுகுறித்து கூறுகையில், "டாடா பவர் ரெனியூவபிள் எனர்ஜி 2045 ஆம் ஆண்டுக்குள் 100% சுத்தமான மின்சாரத்தை அடைய ஒரு மூலோபாய மாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. 'மேட் இன் இந்தியா' காற்றாலைத் தொழில்நுட்பத்துடன் இந்த லட்சியப் பயணத்திற்கு ஆதரவளிப்பதில் பெருமை கொள்கிறோம்."
தொடர்ந்து பேசிய தந்தி, "ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடித்து, மூன்றாவது முறையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ள எங்கள் கூட்டாண்மை, இந்தியாவின் எரிசக்தி மாற்றத்திற்கான எங்கள் பொதுவான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்றார். சுஸ்லானின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திற்கும், அளவிடக்கூடிய, கட்டம் ஒருங்கிணைந்த தூய்மையான ஆற்றலுக்கான டாடா பவரின் தொலைநோக்குப் பார்வைக்கும் இடையிலான ஒத்துழைப்பை இது எடுத்துரைக்கிறது.
இந்தத் திட்டம், நம்பகமான மற்றும் திறமையான மின் தீர்வுகளை வழங்க, "மேட் இன் இந்தியா" கண்டுபிடிப்புகளின் சக்தியையும் காட்டுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சுஸ்லான் குழுமம் 17 நாடுகளில் 21 ஜிகாவாட் அளவிலான காற்றாலை மின் உற்பத்தித் திறனுடன் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.
மேலும், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் இந்தியாவில் உள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களையும், இந்தியா முழுவதும் உலகத் தரத்திலான உற்பத்தி வசதிகளையும் சுஸ்லான் கொண்டுள்ளது.
இன்று வர்த்தகம் முடியும் நேரத்தில் சுஸ்லான் எனர்ஜி பங்கு 1.60% உயர்வுடன் ஒரு பங்கு ரூ.59 ஆக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், டாடா ரெனுவபிள் எனர்ஜி பங்கு 2.07% அதிகரிப்புடன் ரூ.396.05 ஆக வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications