பெங்களூருவை சேர்ந்த ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் ஐபிஓ ஆனது நீண்ட காலமாக முதலீட்டாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஸ்விக்கி இந்த ஐபிஓ மூலமாக 1 பில்லியன் டாலர் வரை திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக நிறுவனம் விரைவில் செபியிடம் ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்ட்ஸை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் ஐபிஓ வேலைகளில் நிறுவனம் மும்முரமாக தயாராகி வரும் நிலையில், நிறுவனத்தின் செயல்பாடுகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, நிறுவனம் தலைமை மாற்றம் முதல் இன்ஸ்டாமார்ட்டின் வரம்பை விரிவுபடுத்துவது வரை, கடந்த சில மாதங்களில் ஸ்விக்கி சில மாற்றங்களை செயல்படுத்தியுள்ளது.

தலைமை மாற்றம்: நிறுவனத்தின் விரைவான வர்த்தகப் பிரிவான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக, ஃபிளிப்கார்டின் அனுபவமிக்க நிர்வாகி அமிதேஷ் ஜாவை அதன் புதிய சிஇஓ ஆக ஸ்விக்கி கடந்த மாதம் நியமித்தது. இதன்மூலம் 18 மாதங்க்ளில் இன்ஸ்டாமார்ட்டின் மூன்றாவது தலைமை மாற்றம் ஆகும். இந்த மாற்றத்தால், இன்ஸ்டாமார்டில் வெளியேறும் தலைவராக இருக்கும் பானி கிஷன் ஸிவிக்கியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கண்காணிக்கவும், இணை நிறுவனர் ஸ்ரீஹர்ஷா மஜெட்டியுடன் பணியாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாமார்ட்டின் வரம்பை விரிவுபடுத்துதல்: ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆனது, சமீபத்தில் அதன் சேவைகளை 11 நகரங்களில் விரிவாக்கம் செய்துள்ளது. அவற்றில், ராஜ்கோட், திருச்சூர் மற்றும் கான்பூர் உட்பட இந்தியா முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த விரிவாக்கம் அடுக்கு 2 மற்றும் 3 நகரங்களுக்குள் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள பெருநகரங்களின் சேவைகளை தாண்டி, வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்த இன்ஸ்டாமார்ட் இந்த முயற்சியை எடுத்துள்ளது. அதன்படி, தினசரி அத்தியாவசிய பொருட்களை வெறும் 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் இந்த தளமானது புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 11 இடங்களில் சிறப்பாக செயல்படும் என நிறுவனம் கூறியுள்ளது.
மங்களூரில், ஒரு புதிய ஸ்டோர் பல பெரிய நகரங்களை விட வேகமாக ஒரே நாளில் 1,000 ஆர்டர்களை எட்டியது. இதற்கு காரணம், உள்ளூர் விற்பனையாளர்களுடனான சிறந்த அணுகுமுறையில் கூட்டணி வைத்துள்ளது. இதனால், பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளுக்கு சேவை செய்வதில் இன்ஸ்டாமார்டின் ஈர்ப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தியுள்ளது. ஸ்விக்கி வழங்கும் வசதியை இந்தியா முழுவதும் உள்ள பயனர்கள் ஏற்கனவே அங்கீகரித்து வருவதாகவும், சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் இருந்து உற்சாகமான தேவை நம்பமுடியாத அளவிற்கு ஊக்கமளிக்கிறது என ஃபிளிப்கார்டின் சிஇஓ அமிதேஷ் ஜா கூறியுளார்.
மேலும், இந்தப் புதிய இடங்களுக்கான எங்கள் விரிவாக்கம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் எனவும், தேசிய மற்றும் உள்ளூர் பிராண்டுகளில் இருந்து வெறும் 10 நிமிடங்களில் தினசரி அத்தியாவசிய பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பொம்மைகள் வரை ஆயிரக்கணக்கான தயாரிப்புகளை மிக எளிமையாக பெற இன்னும் அதிகமான மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.
நிர்வாகத்தில் மாற்றங்கள்: ஸ்விக்கி சமீபத்தில் அதன் நிர்வாகக் குழுவிலும் சில அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி, ஹிமவந்த் ஸ்ரீகிருஷ்ணா குர்னாலா, முன்பு ரிலையன்ஸ் ரீடெய்லின் ஜியோமார்ட்டுடன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இன்ஸ்டாமார்ட்டின் தயாரிப்புத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவரது நியமனம் IPO க்கு முன்னதாக அணியை வலுப்படுத்துவதற்கான ஒரு ஒட்டுமொத்த பங்களிப்பாகும் என நிறுவனம் கூறியுள்ளது. மேலும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பிரிவில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட மயங்க் ராஜ்வைத்யா மற்றும் FMCG பிரிவின் இணை துணைத் தலைவராக இணைந்த மனு சசிதரன் ஆகியோர் மற்ற முக்கிய பணியமர்த்தப்பட்டவர்கள் ஆவர். ஸ்விக்கியின் தலைமைக் கட்டமைப்பின் மறுசீரமைப்பைக் குறிக்கும் வகையில், நிறுவனத்திலிருந்து பல உயர்தர மாற்றங்களை செய்துள்ளது.
உணவக கூட்டாளர்களுக்கான பாலிசி மாற்றங்கள்: சமீபத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான உணவகங்களுடன் 10 ஆண்டுகள் பழமையான ஸ்டார்ட்அப் பார்ட்னர்கள் என்பதை ஸ்விக்கி ஏற்கனவே கூறியிருந்தது. இதனால், உணவக பார்ட்னர்கள் நேரடியாகப் பாதிக்கும் கொள்கை மாற்ற முடிவு அறிவிக்கப்பட்டபோது, அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், அதன் சேவைக் கட்டணங்களைத் தருவதற்காக, ஸ்விக்கி அதன் மொத்த மதிப்பு சேவைக் கட்டணக் கொள்கையை மெட்ரோ அல்லாத பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கும் விரிவுபடுத்தியது.
ஆகஸ்ட் 14 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றம், ஜிஎஸ்டி மற்றும் பேக்கேஜிங் கட்டணங்கள் உட்பட ஆர்டர்களின் மொத்த மதிப்பில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிரது. இந்த மாற்றம் சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள உணவக பார்ட்னர்களின் கமிஷன் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, பாலிசி மாற்றம் பெரிய நகர்ப்புறங்களில் உள்ள உணவகங்களுக்கு ஏற்கனவே பொருந்தும் கட்டணங்களுடன் இவை வசூலிக்கப்படுகிறது. அதேபோல், அதன் வருவாய் வளர்ச்சியை சீராக்க ஸ்விக்கியின் இந்த முயற்சிகளை செய்துள்ளது.
பொது நிறுவனமாக மாற்றும் முயற்சி: ஸ்விக்கி அதன் வரவிருக்கும் ஐபிஓவை வைத்து தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்விக்கி தனது பெயரை ஸ்விக்கி லிமிடெட் என்பதை மாற்றி, அதன் பொது வழங்கல் திட்டங்களை சீரமைக்க பிரைவேட் என்ற வார்த்தையை நீக்கியது. இந்த நடவடிக்கை நிறுவனத்தை பொது முதலீட்டிற்கு தயார்படுத்துவதற்கும் அதன் சந்தை இருப்பை மேம்படுத்துவதையும் ஸ்விக்கி நோக்கமாக வைத்துள்ளது.
ஸ்விக்கியின் தனது ஐபிஓவிற்குத் தயாராகி வரும் நிலையில், தற்போதைய இந்த மாற்றங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி, புதுமை ஆகியவற்றில் ஸ்விக்கியின் வலுவான ஏற்றத்தை காட்டுவதாக அமைந்துள்ளது. இந்த வரவிருக்கும் ஐபிஓ பட்டியல் ஸ்விக்கியின் பயணத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் சக போட்டி உணவு டெலிவரி நிறுவனங்களுக்கிடையில், ஸ்விக்கியின் இந்த மாற்றம் புதிய வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications