ஸ்விக்கி ஐபிஓ ஓபன்.. முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை..?

இந்தியாவின் முன்னணி உணவு விநியோக சேவை நிறுவனமான மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஸ்விக்கி ஐபிஓ இன்று திறக்கப்பட்டது. இந்த ஐபிஓ-வில் இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 8 வரை பங்குகளை வாங்கலாம். ஒரு ஈக்விட்டி பங்கின் விலை ரூ.371 முதல் ரு.390 வரை இருக்கும். நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ.11327.43 கோடி திரட்ட இலக்கு வைத்துள்ளது. கிரே மார்க்கெட் பிரீமியம் விலை ரூ.3 ஆக உள்ளது. இதற்கிடையில், இந்த ஐபிஓவில் முதலீடு செய்வதற்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

 ஸ்விக்கி ஐபிஓ ஓபன்.. முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை..?

ஸ்விக்கி ஐபிஓ கிரே மார்க்கெட்: ஸ்விக்கி ஐபிஓ சந்தைக்குள் நுழைவதற்கு முன்பே அதன் கிரே மார்க்கெட் பிரீமியம் குறைந்துவிட்டது. தற்போதைய கிரே மார்க்கெட் பிரீமியம் ரூ.3 ஆக உள்ளது.

ஸ்விக்கி ஐபிஓ விலை: ஸ்விக்கி ஐபிஓ ஒரு பங்குக்கு ரூ.371 முதல் ரூ.390 என்ற விலையுடன் ரூ.11300 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது.

ஸ்விக்கி ஐபிஓ தேதி: ஸ்விக்கி ஐபிஓ நவம்பர் 6 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும்

ஸ்விக்கி ஐபிஓ அளவு: இந்த ஐபிஓ மூலம் நிறுவனம் சுமார் ரூ.11327.43 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில் புதிய பங்குகள் மற்றும் விற்பனைக்கான சலுகைகளும் அடங்கும்.

ஸ்விக்கி லாட் சைஸ்: முதலீட்டாளர்கள் ஸ்விக்கி ஐபிஓவில் ஒரு லாட்டை வாங்க நிறுவனத்தின் 38 பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். சில்லறை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ.14,820 முதலீடு செய்ய வேண்டும்.

ஸ்விக்கி ஐபிஓ பங்கு ஒதுக்கீடு: ஸ்விக்கி ஐபிஓ பங்கு ஒதுக்கீடு ஆனது வரும் நவம்பர் 9 ஆம் தேதி சனிக்கிழமை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்விக்கி ஐபிஓ பதிவாளர் மற்றும் மேலாளர்கள்: ஸ்விக்கி ஐபிஓ பதிவாளராக லிங்க் இன் டைம் உள்ளது. கோடக் மஹிந்திரா கேபிட்டல், சிட்டி குரூப் குளோபல் மார்கெட் இந்தியா, ஜெஃப்ரீஸ் இந்தியா, அவெந்தஸ் கேபிட்டல், ஜேபி மோர்கன் இந்தியா, போஃபா செக்யூரிட்டீஸ் மற்றும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் ஆகியவை புக் ரன்னிங் மேஜனர்களாக உள்ளன.

ஸ்விக்கி ஐபிஓ ரிசர்வேஷன்ஸ்: ஸ்விக்கியின் 75% பங்குகள் தகுதிவாய்ந்த நிறுவன வாங்குபவர்கள், 15% பங்குகள் நிறுவனமற்ற முதலீட்டாளர்கள், 10% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நிறுவனம் 7,50,000 பங்குகளை அதன் ஊழியர்களுக்கு வெளியீட்டு விலையிலிருந்து சுமார் ரூ.25 தள்ளுபடியை அளிக்கிறது.

ஸ்விக்கி ஐபிஓ நோக்கம்: இந்த ஐபிஓ வெளியீட்டின் மூலம் ஸ்விக்கி நிறுவனம் துணை நிறுவனமான ஸ்கூட்ஸியில் தொழில் நுட்பம் மற்றும் கிளவுட் உட்கட்டமைப்பில் முதலீடு செய்யும். பிராண்ட் மார்க்கெட்டிங் மற்றும் வணிக விளம்பரச் செலவுகள் ஆகியவற்றில் பிராண்ட் விழிப்புணர்வு மற்றும் அதன் தளத்தின் பார்வையை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும்.

ஸ்விக்கி ஐபிஓ பட்டியல்: ஸ்விக்கி ஐபிஓ ஆனது வரும் நவம்பர் 12 அன்று மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்விக்கி நிறுவனம் ஆன்லைன் உணவு விநியோகம் மற்றும் மளிகை பொருள் டெலிவரி செய்யும் முதல் உள்ளூர் சேவை வழங்கும் நிறுவனமாக செயல்படுகிறது. நிதியாண்டிற்கான மார்ச் 2024 வரை, ஸ்விக்கி சுமார் ரூ,2350.24 கோடி மொத்த இழப்பை பதிவு செய்துள்ளது. அதன் வருவாய் ரூ.11634.35 கோடியாக உள்ளது. ஜூன் 2024 நிலவரப்படி, மொத்த இழப்பு ரூ.611.01 கோடியாகவும், வருவாயை ரூ.3.310.11 பதிவு செய்துள்ளது.

நிறுவனம் உணவகம் மற்றும் மெர்சண்ட் பார்டன்ர்களிடமிருந்து கமிஷன்கள், விளம்பர வருவாய், வாடிக்கையாளர்கள் மற்றும் டெலிவரி கூட்டாளர்களிடமிருந்து கட்டணம் மற்றும் ஸ்விக்கி ஒன்-இன் சந்தா வருவாய் ஆகியவற்றிலிருந்து வருவாய் ஈட்டுகிறது. உணவு விநியோக வணிகமானது இந்தியாவில் உள்ள 681 நகரங்களில் முன்னிலையில் உள்ளது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+