இந்தியாவின் புகழ்பெற்ற உணவு டெலிவரி மற்றும் குயிக் காமர்ஸ் சேவை நிறுவனமாக ஸ்விக்கி செயல்பட்டு வருகிறது. ஸ்விக்கி வாயிலாக உணவு பொருட்களும், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வழியாக மளிகை சாமான்களும் டெலிவரி செய்யப்படுகின்றன.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் பொருட்டு ஸ்விக்கி நிறுவனம் கடந்த வாரம் ஐபிஓ வெளியீடு செய்தது. நவம்பர் 13ஆம் தேதி ஸ்விக்கி நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.ஸ்விக்கி ஐபிஓ வெளியீட்டில் ஒரு பங்கின் விலை 390 ரூபாய் என வழங்கப்பட்டது. புதன்கிழமை சந்தையில் பட்டியலிடப்படும் போது தேசிய பங்குச்சந்தையில் 7.7% பிரீமியத்தில் 420 ரூபாய் என வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தையில் 5.2% உயர்வாக 412 ரூபாய் என வர்த்தகமானது.

ஸ்விக்கி நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டின் மூலம் இந்நிறுவன ஊழியர்கள் சுமார் 500 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். Employee Stock Ownership Plan எனப்படும் ஊழியர்களுக்கான பங்கு உரிமை திட்டம் மூலம் இது சாத்தியமாக உள்ளது. Employee Stock Option Plan (Esop) என்பது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிறுவன பங்குகளை வழங்கி அவர்களையும் உரிமையாளர்கள் ஆக்குவதாகும்.
தற்போது இருக்கும் கரண்ட் மார்கெட் வேல்யூவை விட குறைந்த விலையில் பங்குகள் ஊழியர்களுக்கு வழங்கப்படும். Employee Stock Option Plan திட்டத்தின் பிரதான நோக்கமே ஊழியர்களை நீண்ட காலம் நிறுவனத்தில் தக்க வைப்பது மற்றும் நிறுவனத்திற்கு விஸ்வாசமாக இயங்க வைப்பது ஆகும்.
ஒரு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் தங்கள் ஊழியர்கள் நிறுவனத்தில் எத்தனை ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்கள், அவர்களின் செயல் திறன் எப்படி இருக்கிறது என்பதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு இதுபோன்ற பங்குகளை ஒதுக்கீடு செய்யும்.
முன்னதாக ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்ட ஐபிஓ தொடர்பான ஆவணத்தில் செப்டம்பர் 2024 நிலவரப்படி தங்கள் நிறுவனத்தின் Employee Stock Option திட்டத்தின் கீழ் 231 மில்லியன் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது இந்த பங்குகளின் மதிப்பு 9046.65 கோடி ரூபாய் மதிப்பீடு கொண்டது என தெரிவித்திருந்தது.
எனவே இதன் மூலம் ஸ்விக்கியில் பணியாற்றும் சுமார் 500 ஊழியர்கள் கோடீஸ்வரராக உள்ளனர். தற்போது அவர்களுக்கு சொந்தமான பங்குகளின் மதிப்பு பல கோடிகளாக உயர்ந்துள்ளது . Employee Stock Option திட்டத்தின் மூலம் சுமார் 5 ஆயிரம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் இவர்களின் 500க்கும் மேற்பட்டோர் கோடீஸ்வரர் ஆகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நடப்பாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஓக்களில் ஸ்விக்கி நிறுவன ஐபிஓவும் ஒன்று. இந்திய பங்குச்சந்தையில் ஸோமேட்டோ நிறுவனம் பட்டியலிடப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் போட்டி நிறுவனமான ஸ்விக்கியும் தற்போது பங்குச்சந்தையிலிடப்பட்ட நிறுவனமாக மாறியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications