இந்திய பங்கு சந்தைகள் இன்று சரிவில் வர்த்தகமான நிலையிலும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறை சார்ந்த சிர்மா எஸ்ஜிஎஸ் டெக்னாலஜிஸ் (Syrma SGS Technology) நிறுவனத்தின் பங்குகள் சுமார் 4 சதவீதம் வரை உயர்ந்தன. இந்த பங்கு இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 100 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது.
இந்தியாவில் இருந்து பங்குகளை விற்று வெளியேறும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்த பங்கில் மட்டும் தங்களது முதலீட்டை உயர்த்தியுள்ளனர். சிர்மா எஸ்ஜிஎஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 2026 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 7.51 சதவீதமாக இருந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு, செப்டம்பர் காலாண்டில் 9.51 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஜூன் உடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனம் ஒருங்கிணைந்த மொத்த வருவாயாக 1,603.7 கோடி ரூபாயை எட்டியுள்ளது. நுகர்வோர் மற்றும் வாகன துறை சார்ந்த திட்டங்களின் வலுவான வளர்ச்சியால், இது கடந்த ஆண்டை காட்டிலும் 67% அதிகரித்துள்ளதுடன், முந்தைய காலாண்டை விட 8.6% வளர்ச்சியை கண்டுள்ளது.
நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் இந்நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தை, இதில் வருவாய் 532.8 கோடியை எட்டியுள்ளது. இது ஆண்டு அடிப்படையில் 68% வளர்ச்சியாகும். வாகன துறை சார்ந்த வருவாய் 78% அதிகரித்து 394.9 கோடி ரூபாயாக உள்ளது. மருத்துவ துறை வருவாய் இரு மடங்காக உயர்ந்து 134.5 கோடியை எட்டியுள்ளது.
இந்த நிறுவனத்தின் லாபம் ஆண்டு அடிப்படையில் கணிசமாக முன்னேறியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 72.1% அதிகரித்து 176.6 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாயில் ஏற்றுமதியின் பங்களிப்பு 24 சதவீதமாக உயர்ந்து, ஆண்டு அடிப்படையில் 67% வளர்ச்சியடைந்துள்ளது.
சிர்மா நிறுவனத்தின் முதல் காலாண்டு செயல்திறன், அதன் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தளம் , நுகர்வோர் மற்றும் வாகன துறைகளில் எவ்வாறு விரிவடைந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனவரி மாதத்தில் 741 ரூபாயாக இருந்த இந்த நிறுவ்னத்தின் பங்கு மதிப்பு தற்போது 1495 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது 100% வரை பங்கு விலை அதிகரித்துள்ளது. இந்த பங்கின் 52 வார கால உச்சபட்ச மதிப்பு 1822 ரூபாயாகும். இந்நிறுவனத்தில் 41% பங்குகள் பிரமோட்டர்களிடம் உள்ளன. உள்நாடு முதலீட்டு நிறுவனங்கள் 14%பங்குகளையும் வெளிநாடு நிறுவனங்கள் 9.51% சதவீத பங்குகளையும் வைத்துள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

