டாடா குழுமத்தை சேர்ந்த டாடா கேபிட்டல், ஒரு வங்கி அல்லாத நிதி சேவைகள் நிறுவனமாகும். இந்நிறுவனம் டாடா குழுமத்தின் முதன்மை முதலீட்டு நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். டாடா கேபிட்டல் புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களம் இறங்க உள்ளது. டாடா கேபிட்டல் ரூ.15,000 கோடி ஐபிஓவுக்கான அனுமதி வேண்டிய ரகசிய முன் தாக்கல் வழியில் வரைவு ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரகசிய முன் தாக்கல் வழியில் வழி ஐபிஓ ஆவணங்கள் தாக்கல் செய்வது என்பது, ஐபிஓ வெளியிட விரும்பும் நிறுவனம், பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியிடம் வழக்கமாக ஐபிஓ வரைவு ஆவணங்களை (டிஆர்எச்பி) தாக்கல் செய்வதற்கு தற்போது தேவைப்படும் அனைத்து விவரங்களையும் சமர்பிக்க வேண்டும்.

ஆனால் ஒரே வித்தியாசம் என்னவென்றால், ரகசிய வழி முன் தாக்கலில் சமர்பிக்கப்பட்ட விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படுவதில்லை. அதேசமயம் வழக்கமான ஐபிஓ ஆவணங்களை தாக்கல் செய்யும் போது அந்தவிவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்.
நிறுவனங்கள் ஐபிஓ தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் வரை இந்த ரகசியத்தன்மை வசதியை செபி அளிக்கிறது. சில நிறுவனங்கள் நிதி மற்றும் சந்தை உத்திகள் போன்ற தங்களது முக்கியமான தரவைப் பாதுகாக்கவும், தங்கள் நலனை பாதுகாக்கவும் மற்றும் உரிய விடாமுயற்சியை மேம்படுத்தவும் ரகசிய ஐபிஓ தாக்கல்களை விரும்புகின்றன.
கடந்த பிப்ரவரி 25ம் தேதியன்று டாடா கேபிட்டல் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, ஐபிஓ திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. 2024 மார்ச் 31ம் தேதி நிலரவப்படி, டாடா கேபிட்டல் நிறுவனத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் நேரடியாக 92.83 சதவீத பங்குகளை வைத்திருந்தது. எஞசிய பங்குகளை மற்ற டாடா குழும நிறுவனங்கள் மற்றும் ஐஎஃப்சி ஆகியவை வைத்திருந்தன.
டாடா கேபிட்டல் ஐபிஓ தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ரகசிய தாக்கல் முறை மூலம் சந்தை ஒழுங்கு முறை ஆணையத்திடம் (செபி) வரைவு ஆவணங்களை டாடா கேபிட்டல் தாக்கல் செய்துள்ளது. இந்த வெளியீடு முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பங்கு வெளியீட்டின் கலவையாக இருக்கும். டாடா சன்ஸ் மற்றும் முதலீட்டாளர் ஐஎஃப்சி ஆகியவை பங்குகளை ஏலமுறையில் பங்குகளை விற்பனை செய்யும் என தெரிவித்தன.
2022ல் செபி ரகசிய முன் தாக்கல் வழியில் வழி ஐபிஓ ஆவணங்கள் தாக்கல் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. அதுமுதல் இதுவரையிலான காலத்தில், ரகசிய முன் தாக்கல் முறையில் ஐபிஓ வரை ஆவணங்களை தாக்கல் செய்த எட்டாவது நிறுவனம் டாடா கேபிட்டல்.
இதற்கு முன் டாடா ப்ளே, ஓயோ, விஷால் மெகா மார்ட், கிரெடிலா ஃபைனான்சியல் சர்வீசஸ்,இந்திரா ஐவிஎஃப் மற்றும் பிசிக்ஸ்வல்லா ஆகிய நிறுவனங்கள் இந்த வழிமுறை பயன்படுத்தி ஐபிஓ வரைவு ஆவணங்களை தாக்கல் செய்து இருந்தன.


Click it and Unblock the Notifications