டாடா கெமிக்கல்ஸ் பங்கினை வாங்க பரிந்துரை செய்யும் தரகு நிறுவனம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

டாடா கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று குறைந்து, 1001.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று நிலவரப்படி இப்பங்கானது 52 வார உச்சமான 1214.65 ரூபாயில் இருந்து, 17.52% சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் இதன் 52 வார உச்சத்தினை இப்பங்கு எட்டியது. எனினும் தற்போது இப்பங்கின் விலை அதிகரிக்கலாம். ஆக இப்பங்கினை வாங்கலாம் என தரகு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

வாங்கி வைக்கலாம்

வாங்கி வைக்கலாம்

டாடா கெமிக்கல்ஸ் பங்கின் இலக்கு விலையாக 1197 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளது. இப்பங்கின் விலையானது நடப்பு ஆண்டில் இதுவரையில் 6.48% அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

தற்போது தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இதன் வருவாயும் கணிசமாக உயர்ந்து கொண்டுள்ளது. சப்ளையில் அழுத்தன்ம் இருந்து வரும் நிலையில் வரவிருக்கும் காலாண்டு முடிவுகளில் வருவாய் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகம்

தேவை அதிகம்

தேவையானது அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதியானது சரிவினைக் கண்டுள்ளது. இது விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. மேலும் உள்நாட்டு சப்ளையர்களுக்கு நல்ல வாய்ப்பினை அளித்துள்ளது.

டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 32 சதவீதம் அதிகரித்து, 4,148 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து தேவையானது சந்தையில் இருந்து வருகின்றது.

எபிட்டா விகிதம்

எபிட்டா விகிதம்

இந்த நிறுவனத்தின் எபிட்டா விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும் 69.10% அதிகரித்து, 922 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் 25.70% அதிகரித்து, 391 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஜியோஜித் நிறுவனம் டாடா கெமிக்கல்ஸ் சோடா சாம்பலின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலக்கு விலை எவ்வளவு?

இலக்கு விலை எவ்வளவு?

சீனாவின் கட்டுப்பாடுகள் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையானது அதிகரித்துள்ளது. பல பிரச்சனைகள் இருந்த போதிலும் நிறுவனத்திற்கான ஆர்டர்கள் என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. முழுமையான ஆர்டர்கள் பதிவு செய்யப்படுள்ளன. ஆக இது வலுவான சந்தையினை சுட்டிக் காட்டுகின்றது.

இதற்கிடையில் கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம், இலக்கு விலையை 1210 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சராசரி இலக்கு விலையானது 1173.33 ரூபாயாக ட்ரெண்ட்லைன் தரவானது சுட்டிக் காட்டியுள்ளது. இது 17.09% ஏற்றத்தினை காட்டுகின்றது.

இந்த பங்குகள் 5 நாள், 20 நாள் மற்றும் 50 நாள் மூவிங் ஆவரேஜிக்கு மேலாக வர்த்தகம் செய்யப்படுகிறது. எனினும் 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜீக்கும் கீழாக வர்த்தகமாகி வருகின்றது.

இன்றைய விலை நிலவரம்?

இன்றைய விலை நிலவரம்?

என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது சற்று குறைந்து, 1002.05 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 1011.95 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 999.55 ரூபாயாகவும் உள்ளது.

இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது சற்று குறைந்து, 1001.85 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 1012 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 999.65 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1214.65 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 438 ரூபாயாகவும் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+