ரூ.7.5 கோடி வருமானம்.. 74662% உயர்ந்த டாடா பங்கு.. வெறும் ரூ.1 லட்சம் முதலீடு.. உங்ககிட்ட இருக்கா..!

இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கிய பல பங்குகள் உள்ளன. அவற்றில் டாடா குழும நிறுவனமான ட்ரெண்ட் லிமிடெட் சிறப்பாக செயல்பட்டு அதன் முதலீட்டாளர்களுக்கு பணமழையை பொழிந்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகள் முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கியது மட்டுமின்றி அதன் பங்குகளின் விலையும் அதிகரித்துள்ளது. தற்போது அந்த டாடா நிறுவனமான ட்ரெண்டின் பங்கின் விலை கடந்த 5 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரித்து ரூ.7379 ஆக உள்ளது.

டிரெண்ட் லிமிடெட் முதலீட்டாளர்களின் ரூ.1 லட்சத்தை சுமார் ரூ.7.5 கோடியாக மாற்றிய சாதனையை படைத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 146 சதவீத லாபத்தை அளித்துள்ளன. ஜனவரி 1ஆம் தேதி இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இன்று அந்தத் தொகை ரூ.2.46 லட்சமாக ஆகியிருக்கும். அதாவது வெறும் 9 மாதங்களில் உங்களுக்கு ரூ.1.46 லட்சம் லாபம் கிடைத்திருக்கும்.

ரூ.7.5 கோடி வருமானம்.. 74662% உயர்ந்த டாடா பங்கு.. வெறும் ரூ.1 லட்சம் முதலீடு.. உங்ககிட்ட இருக்கா..!


கடந்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்குகள் 1400 சதவீதத்துக்கும் மேல் வருமானம் கொடுத்து முதலீட்டாளர்களுக்குப் பணத்தை வாரி வழங்கியுள்ளது. இது 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் மதிப்புள்ள ட்ரெண்ட் பங்குகளை வாங்கியிருந்தால், இன்று அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சமாக இருந்திருக்கும். இந்த அளவு வருமானம் வேறு எந்த முதலீட்டு திட்டத்திலும் கிடைக்காது.

ட்ரெண்ட் லிமிடெட்டின் ஐபிஓ ஆனது கடந்த ஜனவரி 1, 1999 அன்று வெளியானது. அதன் விலை ரூ.9.87 மட்டுமே. இப்போது சுமார் 25 வருடங்களில் இதன் விலை 7379 ரூபாயாக அதிகரித்து அதன் காரணமாக 74662 சதவீதம் வருமானத்தை கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இன்று அந்தத் தொகை சுமார் ரூ.7.5 கோடியாக அதிகரித்திருக்கும்.

இந்த நிறுவனம் மும்பையில் 1998 இல் தொடங்கப்பட்டது. நிறுவனம் வெஸ்ட்சைட், ஜூடியோ, உட்சா, சமோஹ், மிஸ்பு மற்றும் ஸ்டார் பஜார் போன்ற பல பிரபலமான ஃபேஷன் பிராண்டுகளைக் கொண்டுள்ளது. இது 890 க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ளது. இது 2025ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், நிறுவனத்தின் வருவாய் கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகரித்துள்ளது. இது 2019 ஆம் ஆண்டில் ரூ.2671 கோடியாக இருந்தது, 2024-ல் ரூ.12664 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பங்குச் சந்தையில் கடைசி வர்த்தகத்தில் ட்ரெண்ட் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 1.45% சரிந்து ரூ.7379 ஆக விற்பனையானது

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+