டாடா குழும பங்குகள் என்றாலே கண்ணை மூடி கொண்டு பணத்தை போடலாம் என்ற நிலை இருந்தது, ஆனால் தற்போது அது தலைகீழாக மாறிவிட்டது. டாடா குழுமத்தில் டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட் இடையே நிலவி வரும் மோதல் பங்கு சந்தையில் டாடா குழும பங்குகளின் மதிப்பை கடுமையாக வீழ்ச்சியடைய வைத்துள்ளது.
டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் அந்த பதவியில் இருப்பதை டாடா குழுமத்தின் பிரதான தலைவரான நோயல் டாடா விரும்பவில்லை. இந்நிலையில் திடீரென சந்திரசேகரன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார், பின்னர் அவரை தலைவராக தேர்வு செய்து வாரியம் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது, ஆனால் இது சட்டத்திற்கு புறம்பானது என நோயல் டாடா எதிர்ப்பு தெரிவிக்கிறார். இப்படி டாடா குழுமத்தில் பல குழப்பங்களும் மோதல்களும் நிலவுகின்றன. இது நிறுவன பங்குகளை கடுமையாக பாதித்துள்ளன.

ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலக்கட்டத்தில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 26 டாடா குழும பங்குகள் தங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் 10 சதவீதத்தை இழந்துள்ளன aceequity நிறுவனம் கூறுகிறது. மதிப்பின் அடிப்படையில் பார்த்தால், இது 2.65 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்த மோதல் தொடங்கு முன்பு டாடா குழும பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 27,02,915 கோடியில் இருந்து தற்போது 24,37,166 கோடியாக குறைந்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்கு சந்தையில் பட்டியலிடுவதை தவிர்ப்பதற்கான வழிகள் மற்றும் மாற்றுக் கட்டமைப்புகள் குறித்து டாடா டிரஸ்ட்ஸ் சில திட்டங்களை முன்மொழிந்துள்ளது. மேலும், என். சந்திரசேகரன் மீண்டும் டாடா சன்ஸ் தலைவராக நியமிப்பது தொடர்பான விவகாரங்கள் குறித்து பங்குதாரர்கள் மற்றும் அறக்கட்டளை தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வெடித்துள்ளன. இவை தீர்ந்த பாடும் இல்லை என்பதால் முதலீட்டாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இதில் போட்ட பணத்தை திரும்ப பெற்று வருகின்றனர்.
இந்த சரிவினால் அதிகம் பாதிக்கப்பட்டு பின்தங்கிய பங்குகளின் பட்டியலில் Tata Elxsi Ltd மற்றும் Tata Motors Passenger Vehicles Ltd ஆகியவை 17% வீழ்ச்சியுடன் முன்னணியில் உள்ளன. மற்ற பங்குகள் சுமார் 10 முதல் 14% வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. டாடா குழுமத்தில் நிகழும் அதிகார மோதலால் டாடா குழும பங்குகள் வீழ்ச்சி அடைவதோடு , ஒட்டுமொத்த பங்கு சந்தையிலும் காணப்படும் விற்பனை அழுத்தமும் இந்த இழப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிக நம்பகமான மற்றும் வலிமையான குழுமமான டாடாவில் ஏற்பட்டுள்ள இந்த உயர் மட்ட மோதல் மற்றும் நிர்வாக சிக்கல்கள், பங்குச் சந்தையில் அதன் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சோதித்துள்ளதுடன், குறுகிய காலத்தில் பெரும் நிதி இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முடிவில்லாமல் நீடிக்கும் இந்த பிரச்சினைகள் பங்குதாரர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மோதல்களால் அதிகம் பாதிக்கப்பட்டது டாடா குழும நிறுவனங்களில் பணத்தை போட்ட முதலீட்டாளர்கள் தான்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


