ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோ பங்கு.. வாங்கி போடுங்க.. லாபம் பார்க்கலாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக சமீபத்திய நாட்களாகவே இந்திய சந்தையில் அதிக கொந்தளிப்புகள் இருந்து வருகின்றது. இந்த சமயத்தில் பங்குகளை வாங்கலாமா? வேண்டாமா? இது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமே என்ற அச்சம் இருந்து வருகின்றது.

 

குறிப்பாக கடந்த வாரத்தில் அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், பங்கு சந்தைகளில் பலத்த ஏற்ற இறக்கம் இருந்து வருகின்றது. தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றது.

இந்திய சந்தையில் நிலவி வரும் போக்கு இன்னும் சற்று நீடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பே நிலவி வருகின்றது. இதன் காரணமாக இனி வரவிருக்கும் நாட்களில் கொந்தளிப்பான சூழ்நிலையே தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

9 வயதில் ஆப் டெவலப்பர்.. அசத்தும் இந்திய சிறுமிகள்.. வாழ்த்து தெரிவித்த ஆப்பிள் டிம் குக்! 9 வயதில் ஆப் டெவலப்பர்.. அசத்தும் இந்திய சிறுமிகள்.. வாழ்த்து தெரிவித்த ஆப்பிள் டிம் குக்!

டாடா குழும பங்கு

டாடா குழும பங்கு

எனினும் இந்த காலக்கட்டத்தில் சில பங்குகள் விலை ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் பங்கு இந்தியன் ஹோட்டல்ஸ் லிமிடெட். இது பிரபல இந்திய முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோவில் இருந்த பங்குகளில் ஒன்றாகும். டாடா குழுமத்தினை சேந்த இந்த பங்கு இந்தியா ஹோட்டல் & ஹாஸ்பிட்டாலிட்டி துறையை சேர்ந்த ஒரு பங்காகும்.

ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் பேவரைட் பங்கு

ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் பேவரைட் பங்கு

இந்த ஹோட்டல் பங்கின் சந்தை மதிப்பானது 46,411.56 கோடி ரூபாயாகும். இந்தியன் ஹோட்டல்ஸ் லிமிடெட் ஒரு லார்ஜ் கேப் நிறுவனமாகும். இது மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றாகும். இந்திய பங்கு சந்தையின் தந்தை என புகழப்பட்ட ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் போர்ட்போலியோவில் இருந்து, நல்ல லாபம் கொடுத்த பங்குகளில் ஒன்றாகும்.

பங்கு வரலாறு
 

பங்கு வரலாறு

இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவன பங்கின் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று என் எஸ் இ-யில் 2.20% குறைந்து 326.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலை 333.85 ரூபாயாகும். இந்த பங்கின் விலையானது ஜனவரி 1, 1999ல் 30.22 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 326 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இதிலிருந்து இதன் ஆல் டைம் உச்ச விலையுடன் பார்க்கும்போது 980.41% ஏற்றத்துடன் காணப்பட்ட்டது.

பங்கு விலை நிலவரம்?

பங்கு விலை நிலவரம்?

இந்த பங்கின் விலையானது செப்டம்பர் 29, 2017ல் 106.12 ரூபாயாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இப்பங்கின் விலையானது 207.67% ஏற்றம் கண்டுள்ளது. இதன் சுமாரான CAGR விகிதம் 25.19% ஆகும்.

இதே கடந்த 1 ஆண்டில் இப்பங்கின் விலையானது 77.82% ஏற்றம் கண்டுள்ளது. இதே நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 77.40% ஏற்றம் கண்டுள்ளது. இதன் பங்கு விலை என்எஸ்இ-யில் இதன் உச்ச விலை 337.20 ரூபாயாகும். இது கடந்த செப்டம்பர் 16, 2022 அன்று தொட்டது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 158.54 ரூபாயாகும். இது செப்டம்பர் 21, 2021ல் தொட்டது. தற்போதைய விலை உச்சத்தில் இருந்து 3.17% கீழாக உள்ளது. எனினும் குறைந்த பட்ச விலையில் இருந்து 105.94% மேலாக உள்ளது.

யாரிடம் எவ்வளவு பங்கு?

யாரிடம் எவ்வளவு பங்கு?

ஜூன் 2022 காலாண்டு நிலவரப்படி, இப்பங்கினில் புரோமோட்டர்கள் வசம் 38.19% பங்குகள் உள்ளது. இதே FIIஐக்கள் வசம் 15.07%மும், DIIக்கள் வசம் 29.56%மும், அரசின் வசம் 0.13%மும், பொது மக்கள் வசம் 17.05% வசமும் உள்ளது.

இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை தற்போது கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட 20% எட்டியுள்ளது. தற்போது ரூம் டிமாண்ட் அதிகரித்துள்ளது. தற்போது திருமணங்கள், போக்குவரத்துகள், தொழில் முறை பயணம் அதிகரித்துள்ளது. இது இந்த பங்கின் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பினை அளித்துள்ளது.

 

இலக்கு விலை

இலக்கு விலை

அடுத்த சில ஆண்டுகளுக்கு இன்னும் வளர்ச்சி விகிதமானது பெரியளவில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இதன் வளர்ச்சி விகிதமானது உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த இந்த பங்கின் வளர்ச்சிக்கு உந்துதலாக அமையலாம். இதற்கிடையில் தான் இந்த நிறுவனத்தின் இலக்கு விலையாக 380 ரூபாயினை நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

இது தற்போதைய சந்தை விலையில் இருந்து 16% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம் கடந்த ஜுன் காலாண்டில் 1,57,29,200 பங்குகள் அல்லது 1.11% பங்குகள் இருந்தது. இதே அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் 1,42,87,765 பங்குகள் அல்லது 1.01% பங்குகள் இருந்தது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata group stock! Analysts suggests to buy this rakesh jhunjhunwala portfolio stock

Tata group stock! Analysts suggests to buy this rakesh jhunjhunwala portfolio stock/ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோ பங்கு.. வாங்கி போடுங்க.. லாபம் பார்க்கலாம்
Story first published: Sunday, September 25, 2022, 19:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X