டாடா குழும பங்குகள் வீழ்ச்சி: ரூ.8.2 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!!

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தொழில்குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம், கடந்த ஆறு மாதங்களில் பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மொத்தம் ரூ.8.2 லட்சம் கோடி சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்வதால், டாடா கன்சல்டென்சி சர்வீசஸ் (TCS), டாடா மோட்டார்ஸ், டைட்டன், டாடா பவர் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இது டாடா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பின் 24% இழப்பாக பார்க்கப்படுகிறது. இவ்வளவு பெரிய அளவிலான பங்கு மதிப்பு இழப்பு, இந்திய பங்குச் சந்தையின் வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FIIs) இந்திய பங்குகளை அதிகமாக விற்பனை செய்து வருகிறார்கள். உலகளாவிய பொருளாதார சூழல், அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்ந்துள்ளது மற்றும் சீனாவின் பங்குச் சந்தை சவால்கள் போன்ற காரணங்களால், FIIs இந்தியாவில் இருந்து பணத்தை வெளியே கொண்டு செல்கின்றனர். டாடா மோட்டார்ஸ், TCS, டைட்டன் போன்ற நிறுவனங்கள், கடந்த சில காலமாக எதிர்பார்த்த அளவில் வளர்ச்சியை காணவில்லை. ஆட்டோமொபைல் துறை, ஐடி துறை, நுகர்வோர் பொருட்கள் துறை போன்றவை அதிகமான அழுத்தங்களை சந்தித்து வருகின்றன.

டாடா குழும பங்குகள் வீழ்ச்சி: ரூ.8.2 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் பொருளாதார சவால்கள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் ஏற்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) குறைவு, ஐரோப்பாவில் முதலீட்டாளர்களின் கவலை, சீனாவில் பாதிக்கப்படும் தொழில்துறை போன்றவை, இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. டாடா மோட்டார்ஸ் கடந்த ஆறு மாதங்களில் 42.78% பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டுள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) வாகனங்களின் தேவையின்மை, சீனா மற்றும் ஐரோப்பா சந்தையில் விற்பனை குறைவு ஆகியவை இதற்குக் காரணமாகும். இதனால் ரூ.1.7 லட்சம் கோடி சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவமான TCS, கடந்த ஆறு மாதங்களில் 18% பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் வளர்ச்சி குறைவு, புதிய திட்ட ஒப்பந்தங்கள் குறைவு, தொழில்நுட்ப முதலீட்டில் தடுமாற்றம் ஆகியவை இதற்குக் காரணம். பர்னிதுறை மற்றும் ஆபரணத் துறையில் முன்னணி நிறுவனமான டைட்டன், கடந்த ஆறு மாதங்களில் 15% வீழ்ச்சி கண்டுள்ளது. ரூ.47,700 கோடி சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. நுகர்வோர் செலவு குறைவு, நகை விலைகள் அதிகரிப்பு ஆகியவை இதற்கு காரணம்.

மின்னாற்றல் துறையில் முக்கியமான டாடா பவர், 21% வீழ்ச்சி சந்தித்து, ரூ.29,000 கோடி சந்தை மதிப்பு இழந்துள்ளது. இந்தியாவின் மின் உற்பத்தி மற்றும் விற்பனை குறைவு, புது திட்டங்கள் தேக்கமடைதல் போன்றவை இதற்குக் காரணம். நுகர்வோர் பொருட்கள் துறையில் டாடா டீ, டாடா காபி, டாடா ஸால்ட் போன்ற பிராண்டுகளை கொண்டுள்ள டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், 20.38% வீழ்ச்சி கண்டுள்ளது. ரூ.24,000 கோடி சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வீழ்ச்சி, டாடா குழுமத்தில் முதலீடு செய்த பெரிய முதலீட்டாளர்களுக்கும் பெரும் இழப்பாக உள்ளது. முன்னணி முதலீட்டாளர் ரேகா ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, கடந்த ஐந்து மாதங்களில் ரூ.1,790 கோடி இழந்துள்ளார். டாடா மோட்டார்ஸ் பங்குகளில் மட்டுமே அவருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது போன்ற சவால்களை சமாளிக்க, டாடா குழுமம் தனது நிதிசார்ந்த சேவைகள் பிரிவான டாடா கேப்பிட்டலை, ரூ.11 பில்லியன் மதிப்பீட்டுடன் பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் $2 பில்லியன் (ரூ.16,500 கோடி) வரை முதலீடு திரட்டப்படலாம்.

சந்தை நிபுணர்கள் இந்த வீழ்ச்சி தற்காலிகமானது என்றும், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். இந்தியா ஆசியாவிலும் உலகளாவிய அளவிலும் சிறந்த வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டுள்ளது என்று ஜெஃபரீஸ் நிறுவனத்தின் உலகளாவிய இக்விட்டி ஸ்ட்ராடஜி தலைவர் கிறிஸ்டோபர் வுட் கூறியுள்ளார். இந்த பங்குச் சந்தை வீழ்ச்சி, இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும். ஆனால், டாடா குழுமம் தனது தொழில்துறையை பலப்படுத்தி மீண்டும் முன்னணி நிலைக்கு வருவதை எதிர்பார்க்கலாம்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+