டாடா குழுமத்துக்கு உட்பட்ட நிறுவனத்தின் பங்குகள் என்றாலே பங்குச்சந்தையில் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும். அதனை நிரூபிக்கும் வகையில் டாடா குழுமத்தை சேர்ந்த ஒரு பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. இப்போது கூட அந்த பங்கினை வாங்கினால் செம லாபம் கிடைக்கும் என பங்குச்சந்தை தரகு நிறுவனங்கள் கூறுகின்றன.
டாடா குழுமத்தை சேர்ந்த புகழ்பெற்ற சில்லறை வர்த்தக நிறுவனமான 'ட்ரெண்ட்' (Trent) நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் நல்லம் ஏற்றம் கண்டுள்ளன. நடப்பு நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் மாதங்களை உள்ளடக்கிய இரண்டாவது காலாண்டு நிதி முடிவுகளில் நிறுவனம் எதிர்பார்த்ததை விட மிக சிறப்பான வருவாயை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக, தேசிய பங்குச் சந்தையில் ட்ரெண்ட் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து அப்பர் சர்க்கியூட்டை எட்டியது.

இதனால் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு1.5 டிரில்லியன் ரூபாயை தாண்டியது. டிரெண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 23 சதவீதம் அதிகரித்து 5,788 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது 4,724 கோடி ரூபாயாக உள்ளது.
மோதிலால் ஓஸ்வால் உள்ளிட்ட முன்னணி தரகு நிறுவனங்கள் நிறுவன வருவாய் 18 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், அதை மிஞ்சும் வகையில் 23% வளர்ச்சியை நிறுவனம் எட்டியுள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக 20 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி கண்டுள்ளதை குறிக்கிறது. மொத்தமாக, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ஒட்டுமொத்த வருவாய் 21% அதிகரித்து 11,454 கோடியை எட்டியுள்ளது.
இந்த சிறப்பான வளர்ச்சிக்கு நிறுவனத்தின் கடைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் முக்கிய காரணமாகும். குறிப்பாக, புகழ்பெற்ற Zudio பிராண்டின் 1000ஆவது கடை திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களை குறி வைத்து Zudio கடைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால் டிரெண்ட் லாபம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
தற்போதைக்கு டிரெண்ட் நிறுவனத்தின் கீழ் Westside, Zudio உள்ளிட்ட பிராண்டுகளின் 1342 கடைகள் செயல்படுகின்றன. இது கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகும். இந்நிலையில் பெரும்பாலான சர்வதேச மற்றும் உள்நாட்டு தரகு நிறுவனங்கள் ட்ரெண்ட் நிறுவனத்தின் பங்கு மீது பாசிடிவான பார்வையை வெளிப்படுத்தியுள்ளன.
கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் டிரெண்ட் பங்கு மதிப்பு 3,010 ரூபாய் வரை உயரும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இன்று ஒரு பங்கின் விலை 2,840 ரூபாயாக உள்ளது. இந்நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 15% பங்குகளை வைத்துள்ளன. அந்த வகையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் அபார நம்பிக்கை பெற்ற நிறுவனமாக இது உள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


