மும்பை: டாடா குழுமத்தின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக மாறியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து புதன்கிழமை மும்பை பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2% வரை உயர்ந்தது.
டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது நிறுவனம் தற்போது எந்த கடனும் இல்லாமல் சுயமாக செயல்படும் நிறுவனமாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளது.

தங்களது ஜாகுவார் லேண்ட் ரோவர் தொழிலும் 2025ஆம் நிதியாண்டில் கடன் இல்லாத ஒரு நிறுவனமாக மாறிவிடும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை எடுத்து மும்பை பங்குச்சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, 1,010.25 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது.
பயணிகள் வாகனங்கள் மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் வர்த்தகத்தை தனி தனி நிறுவனங்களாக பிரித்தது நல்ல வளர்ச்சியை தரும் என டாடா மோட்டார்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனிடையே டாடா மோட்டார்ஸ் பங்கு குறித்து பல்வேறு தரகு நிறுவனங்களும் தங்களின் கணிப்பை வெளியிட்டுள்ளன.
சிஎல்எஸ்ஏ தரகு நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டு வாகன துறையில் டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்ட வளர்ச்சியை காணும் என்றும் அதற்கு ஏற்ப திறமையான மேலாண்மையை அந்த நிறுவனம் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிறுவனத்தின் வணிக வாகனங்களுக்கான டிமாண்ட் என்பது அடுத்த சில ஆண்டுகளில் 4-5 சிஏஜிஆர் வரை வளரும் எனக் கூறியுள்ளது. எனவே சிஎல்எஸ்ஏ தரகு நிறுவனம் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகளை 'அவுட் பெர்ஃபார்ம்" ரேட்டிங் என்ற பிரிவில் வைத்து ஒரு பங்கின் மதிப்பு 1,181 ரூபாய் வரை உயரக்கூடும் என் தெரிவித்துள்ளது.
ஜேஎம் ஃபைனான்சியல் நிறுவனம் 2025 ஆம் நிதியாண்டில் வணிக வாகனங்கள் பிரிவு ஒரு இலக்கம் என்ற அளவில் வளர்ச்சி காணும் என கருதப்படும் நிலையில் டாடா மோட்டார்ஸ் இரண்டு இலக்கங்களை இலக்காக கொண்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
ஜேஎம் ஃபைனான்சியல் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்துள்ளது.இதன் பங்கு மதிப்பு 1200 ரூபாய் வரை உயரக்கூடும் என கணித்துள்ளது.
மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் டாடா மோட்டார்ஸின் ஜேஎல்ஆர் நிறுவனத்தின் மார்ஜின் என்பது 2025ஆம் நிதி ஆண்டில் சீராக இருக்கும் என்று கூறி இந்த நிறுவனத்தின் பங்குக்கு நியூட்ரல் என்ற மதிப்பீட்டைத் தந்துள்ளது. பங்கின் மதிப்பு 955 ரூபாயாக உயரலாம் என தெரிவித்துள்ளது.
ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் மதிப்பு குறையலாம் என கூறியுள்ளது. அதாவது 915 ரூபாய் வரை சரியலாம் என தெரிவித்துள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications