அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அண்மையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனால் அங்கு இறக்குமதி செய்யப்படும் கார்களின் விலை கடுமையாக உயரும். இதன் விளைவாக வெளிநாட்டு கார்களின் விற்பனையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் டாடா மோட்டார்ஸ் உள்பட பல வெளிநாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசிக்க தொடங்கின. இதற்கிடையே அமெரிக்க அரசாங்கத்தின் இறக்குமதி கார்களுக்கு மீதான 25 சதவீத வரி கடந்த 3ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட சொகுசு கார்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஏப்ரல் 7 (இன்று) முதல் இது அமலுக்கு வரும் என்று ஜாகுவார் லேண்ட் ரோவர் தெரிவித்து இருந்தது. டிரம்பின் வரி விதிப்புக்கு இது பதிலடியாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை டாடா மோட்டார்ஸின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கிய வருவாய் உந்து சக்தியாக ஜேஎல்ஆர் உள்ளது.

ஏற்றுமதியை நிறுத்தினால் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வருவாய் பாதிக்கும். உதாரணமாக கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் மொத்தம் 4,30,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் சுமார் 1,07,500 கார்கள் வட அமெரிக்காவில் விற்பனை செய்துள்ளதாக அதன் ஆண்டு அறிக்கை கூறுகிறது. தற்போது ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதால் கார் விற்பனை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையில் இன்று டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை கடுமையாக சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியபோது, டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 10 சதவீதம் குறைந்து லோயர் சர்க்கியூட் அடித்து ரூ.552.50 என்ற விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை சுமார் 12 சதவீதம் குறைந்து ரூ.542.55க்கு சென்றது. மும்பை பங்குச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2.33 லட்சம் கோடியாக இருந்தது.
டிரம்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்தது. இதனால் சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிப்பதற்கான சா்த்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இன்று பலத்த அடிவாங்கியது. இந்திய பங்குச் சந்தைளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் பலத்த சரிவுடன் தொடங்கியது. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 3,864.75 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications