ஒரு வருடத்தில் 240% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு அள்ளி கொடுத்த டாடா..!

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டாடா மோட்டார்ஸ் பல தடைகளைத் தாண்டி மீண்டும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான கவனத்தைச் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கார்கள் மூலம் பெற்றுள்ளது.

குறிப்பாக டாடா நெக்சான் கார் பல லட்சம் வாடிக்கையாளர்களை மிகவும் குறைந்த காலக்கட்டத்தில் பெற்றுள்ளது.

இதே கார் மாடலை வைத்து டாடா அறிமுகம் செய்த எலக்ட்ரிக் கார்-ம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் கார் வர்த்தகத்தில் இதை அடித்தளமாக வைத்து பல கார்களைப் புதிதாக அறிமுகம் செய்யவும் தயாராகியுள்ளது.

2020 லாக்டவுன்

2020 லாக்டவுன்

இதனால் மார்ச் 2020 லாக்டவுன் அறிவிப்பின் போது ஏற்பட்ட சரிவுக்குப் பின் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஜூலை 1ஆம் நிலவரத்தின் படி கடந்த ஒரு வருடத்தில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் யாரும் எதிர்பார்காத வகையில் சுமார் 239.24 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதேபோல் 2021ல் மட்டும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் 84.72 சதவீதம் வளர்ச்சி அடைந்து பெரும் லாபத்தை முதலீட்டாளர்களுக்குப் பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் சில வருடங்களுக்கு முன்பும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், மேம்படுத்தவும் பல நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது, ஆனால் அதில் பல தோல்வியிலும், பெரிய அளவிலான லாபத்தை அளிக்காத ஒன்றாக மாறியது.

டாடா நெக்சான்- வெற்றி

டாடா நெக்சான்- வெற்றி

இதனால் டாடா மோட்டார்ஸ் செலவுகளைக் கட்டுப்படுத்தியும், புதிய தலைமை அதிகாரிகளை அமர்த்தியும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் யாருடைய உதவியும் இல்லாமல் தனி நிறுவனமான தொடர்ந்து முன்னேற துவங்கியது, இதன் வெற்றி தான் டாடா நெக்சான்.

500 கோடி ரூபாய் முதலீடு

500 கோடி ரூபாய் முதலீடு

இதற்கிடையில் ஜூன் 14ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் நிர்வாகக் குழு சுமார் 500 கோடி ரூபாய் தொகையைப் பத்திர வெளியீடு மூலம் முதலீடாக ஈர்க்க ஒப்புதல் அளித்தது, இந்நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

அமெரிக்காவின் கோல்மேன் சாச்சீஸ்

அமெரிக்காவின் கோல்மேன் சாச்சீஸ்

மேலும் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு ஆலோசனை வங்கியான கோல்மேன் சாச்சீஸ் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளை 455 ரூபாய் டார்கெட் விலையாக வைத்து வாங்கலாம் என அறிவித்துள்ளது. இதன் மூலம் புதிய முதலீட்டாளர்களுக்கு இன்னும் 31 சதவீத லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தரமான வளர்ச்சி

தரமான வளர்ச்சி

டாடா மோட்டார்ஸ் பங்குகள் ஒரு வருடத்திற்கு முன்பு ஜூலை 2, 2020ல் ஒரு பங்கு விலை 101.55 ரூபாயாகவும், ஜனவரி 1, 2021ல் 186.50 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் 1.44 சதவீத வளர்ச்சியில் 344.50 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+