வாங்கி போடலாமா.. டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, டிவிஎஸ் குறித்து நிபுணர்கள் முக்கிய அப்டேட்.. ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில தினங்களாகவே இந்திய சந்தையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது. எனினும் இந்த காலக்கட்டத்திலும் சில பங்குகள் வலுவான ஏற்ற பாதையில் சென்று கொண்டுள்ளன.

 

குறிப்பாக ஆட்டோ மொபைல் துறையில் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக ஆட்டோ மொபைல் சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 பங்குகள் பட்டியல்

3 பங்குகள் பட்டியல்

அந்த வகையில் ஜெஃபரீஸ் நிறுவனம், சில ஆட்டோமொபைல் நிறுவனங்களை பரிந்துரை செய்துள்ளது. இதில் டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய லிஸ்டில் உள்ளன. இது வரவிருக்கும் விழாக்கால பருவம் காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

கொரோனாவுக்கு முன்பாக பாதிக்கப்பட்டிருந்த வாகன விற்பனையானது, கொரோனாவுக்கு பின்பு இன்னும் மோசமான தாக்கத்தினால் பாதிக்கப்பட்டது. தற்போது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனினும் இந்த காலகட்டத்தில் மூலதன பொருட்கள் விலையானது உச்சத்தில் இருந்து வருகின்றது.

செலவு அதிகரிப்பு
 

செலவு அதிகரிப்பு

மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பால் உற்பத்தி செலவானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வாகன விலையானது அதிகரிக்க வழிவகுத்துள்ளது. அதேசமயம் மூலதன பொருட்கள் பற்றாக்குறையால் வாகன உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்னும் விலையேற்றம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் வளர்ச்சி

டாடா மோட்டார்ஸ் வளர்ச்சி

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி, நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார்ஸ் என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம், பிரான்சிசி வணிகம் என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் - CAGR

டாடா மோட்டார்ஸ் - CAGR

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து அதன் மின்சார வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அதன் லேண்ட் ரோவர் மாடல் வாகனங்கள் மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். பயணிகள் வாகனங்களுக்கான தேவையானது அதிகரித்து வரும் நிலையில், இதன் CAGR விகிதமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இதன் இலக்கு விலையை 540 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

மாருதி சுசூகி நிறுவனத்தின் ஏற்றுமதி விகிதமானது கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இதன் வளர்ச்சிக்கு இது சாதகமாக அமையலாம். கடந்த 2019 - 2020ல் 8000 - 9000 ஆக இருந்த ஏற்றுமதியானது, 2022ல் 20,000 ஆக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 22,000 வாகனங்களாகவும் அதிகரித்துள்ளது. இதன் இலக்கு விலையை தரகு நிறுவனம் 12,000 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார்ஸ்

டிவிஎஸ் மோட்டார்ஸ்

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின், CAGR விகிதம் வரவிருக்கும் ஆண்டுகளில் இரு இலக்கில் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தையில் ஸ்கூட்டர் பிரிவில் 15 - 24% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே மோட்டார் சைக்கிள் பிரிவிலும் 14% வளர்ச்சியும் கண்டு காணப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata motors, TVS, maruti suzuki: Experts recommend buying 3 auto stocks

Stocks to watch include Tata Motors, Maruti Suzuki and TVS Motors.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X