அக்டோபர் மாதம் என்றாலே விழாக்காலம் தொடங்கி விடும். இந்த பண்டிகை காலத்தில் பொதுவாக செலவு அதிகரிக்கும். கடந்த 1 வருடத்தில் பி எஸ் இ சென்செக்ஸ் 3.13% சரிவினைக் கண்டுள்ளது. இதில் மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் 53% வரையில் ஏற்றம் கண்டுள்ளது.
தரவுகள் 4 சக்கர வாகனமான மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த 1 வருடத்தில் 20.93% ஏற்றம் கண்டுள்ளது.
இதே ஜே எல் ஆர் நிறுவனத்தின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 19.65% ஏற்றம் கண்டுள்ளது. இதே எம் &எம் பங்கு விலையானது 53.63% ஏற்றம் கண்டுள்ளது.
மஹிந்திரா & டாடா
இதற்கிடையில் வாகன நிறுவனங்களின் பங்குகளின் விலையானது இந்த விழாக்கால பருவத்தில் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மஹிந்திராவின் டிராக்டர், எஸ் யு வி கார், மின்சார வாகன துறையில் பெரும் வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே டாடா நிறுவனத்தின் ஸ்கார்ப்பியோ என வாகனம் ஜூன் 27 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 15.41% ஏற்றம் கண்டுள்ளது.
மாருதி சுசூகி
இதே நாட்டின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா கடந்த ஜூன் 30 அன்று மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸாவை அறிமுகம் செய்தது. இது மாருதியின் பங்கின் விலை ஏற்றம் காண காரணமாக அமைந்தது. இது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 8550 ரூபாயாக இருந்தது.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் பங்கு விலையானது இந்த ஆண்டில் 17% சரிவினைக் கண்டுள்ளது. இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, இங்கிலாந்தில் ரெசசன் பிரச்சனை என பலவும் வாகன சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஜே எல் ஆரின் வருவாய், டாடா மோட்டார்ஸின் வருவாயில் 67% பங்கு வகிக்கிறது.
இனியும் விற்பனை அதிகரிக்கலாம்
இப்படி பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் கடந்த செப்டம்பர் மாத விற்பனையானது, பெரும் உச்சத்தினை எட்டியுள்ளது. குறிப்பாக தனி நபர் வாகனங்கள், வர்த்தக வாகனங்கள், டிராக்டர்கள் என பலவற்றின் விற்பனையானது பெரியளவில் அதிகரித்துள்ளது. வரவிருக்கும் மாதங்களிலும் விற்பனையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலக்கு எவ்வளவு?
மாருதி சுசூகி மற்றும் எம் &எம் பங்கின் இலக்கு விலையானது 9930 ரூபாய் மற்றும் 1500 ரூபாயாக தரகு நிறுவனம் கணித்துள்ளது. இதன் முடிவு விலையானது 9418 மற்றும் 1338 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலையானது 431 ரூபாயாகும். இதன் இலக்கு விலை மீடியம் டெர்மில் 446 ரூபாயாகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications