முதலீட்டாளர்களே டாடா குழுமத்தில் ஒரு மல்டிபேக்கர் பங்கு..!! Gen Z தான் இவங்க கஸ்டமர்ஸ்..!!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா குழுமத்துக்கு சொந்தமான டிரெண்ட் (trent) நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஃபேஷன் பிரிவில் வளர்ச்சி அடைந்து வரும் டிரெண்ட் நிறுவனம் 22% லாபத்தை பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் சிறு சிறு நகரங்களில் கூட நாம் ஸூடியோ (Zudio) கடைகளை பார்க்க முடிகிறது. பெரிய விளம்பரம் இல்லாமல் வாடிக்கையாளர்களின் வாய் வார்த்தைகள் மூலமாகவே இந்த கடை பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக Gen Zக்கள் துணிமணி வாங்க வேண்டும் என்றால் முதலில் இங்கு தான் செல்கிறார்கள். இதனால் தான் இந்த கடையின் லாபமும் வருவாயும் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டே வருகிறது.

முதலீட்டாளர்களே டாடா குழுமத்தில் ஒரு மல்டிபேக்கர் பங்கு..!!  Gen Z தான் இவங்க கஸ்டமர்ஸ்..!!

டிரெண்ட் நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் ஸூடியோ. இதன் வளர்ச்சி தான் ஒட்டுமொத்தமாக டிரண்டின் லாபத்தை உயர வைத்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் டிரெண்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 22% அதிகரித்து 518 கோடியாக உயர்ந்துள்ளது. வலுவான விற்பனை மற்றும் இளைஞர்களிடம் கிடைத்த வரவேற்பே இதற்கு காரணம்.

டிரெண்ட் நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் 18% வளர்ச்சியை கண்டுள்ளது. ஃபேஷன் மற்றும் லைஃப் ஸ்டைல் பிரிவுகளில் கவனம், புதிய கடைகளின் விரிவாக்கம் ஆகியவை வருவாய் உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. டிரெண்ட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வெஸ்ட்சைட் (Westside) லைஃப் ஸ்டைல் மற்றும் ஃபேஷன் ஸ்டோர்கள், மற்றும் மதிப்புமிக்க ஃபேஷன் பிராண்டான ஸூடியோ ஆகியவை தொடர்ந்து வலுவான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளன.

Also Read

குறிப்பாக, சிறு நகரங்களில் ஸூடியோ கிளைகளின் விரிவாக்கம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளது. மேலும், ஸ்டார் பஜார் (Star Bazaar) ஹைப்பர் மார்க்கெட்டும் நல்ல வருமானம் தந்துள்ளது.

ஃபேஷன் பிரிவில் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ், மேக்ஸ் என கடுமையான போட்டி நிலவி வந்தாலும், டிரெண்ட் நிறுவனம் தனது நவீன உத்திகள் மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான தயாரிப்புகளால் இந்த லாபத்தை எட்டியுள்ளது.

Recommended For You

டிரெண்ட் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியானதை அடுத்து இன்று பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்கு 3,194 ரூபாய் வரை உயர்ந்தது. காலையில் இது 3,060 ரூபாயாக தான் இருந்தது. டிரெண்ட் பங்கு மதிப்பு கடந்த 6 மாதங்களில் 15% உயர்ந்துள்ளது. அதே போல 5 ஆண்டுகளில் 418% லாபம் தந்து மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது.

டாடா குழும பங்கு, இந்தியாவில் ஃபேஷன் துறைக்கு இருக்கும் வரவேற்பு, ஸூடியோ விரிவாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் டிரெண்ட் பங்கினை பரிசீலனை செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+