டாடா சன்ஸ் ஐபிஓ: ஒரு பங்கு இருந்தா கூட கோடீஸ்வரர் ஆகலாம்..!! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்..?

இந்தியாவின் முன்னணி மற்றும் பழமையான தொழில் குழுமமான டாடா குழுமத்தின் பிரதான ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் விரைவில் ஐபிஓ வெளியிட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. இந்த ஆண்டின் பிரம்மாண்டமான ஐபிஓ-க்களில் இதுவும் ஒன்று.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றி டாடா சன்ஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்டு பொது நிறுவனமாக மாற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடக்கும் நிலையில் பங்கு சந்தை மற்றும் முதலீட்டு நிபுணர்கள் டாடா சன்ஸில் பங்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பல கோடி ஜாக்பாட் பெற போவதாக கணிப்பு வெளியிட்டுள்ளனர். டாடா சன்ஸில் டாடா குழுமத்துக்கு உட்பட்ட பல்வேறு நிறுவனங்களிலும் கணிசமான பங்குகளை வைத்துள்ளன. எனவே டாடா குழுமம் வளர வளர டாடா சன்ஸ் மதிப்பும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.

டாடா சன்ஸ் ஐபிஓ: ஒரு பங்கு இருந்தா கூட கோடீஸ்வரர் ஆகலாம்..!! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்..?

SMC குளோபல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் சீமா ஸ்ரீவாஸ்தவா மிண்ட் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் , டாடா சன்ஸ் நிறுவனத்தின் மொத்த சாதாரண பங்குகளின் எண்ணிக்கை 4,04,146 ஆகும். இதுவே டாடா சன்ஸின் ஒட்டுமொத்த மதிப்பீடு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் என வைத்துக்கொண்டால், டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஒரே ஒரு பங்கின் மதிப்பு சுமார் 2.97 கோடி ரூபாய் வரை வரக்கூடும் என கணக்கிடுகிறார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட மதிப்பீட்டினால், குறைந்த அளவிலான பங்குகளை வைத்துள்ள தனிநபர்கள் பலரின் சொத்து மதிப்பு கோடிகளில் உயரும். மறைந்த ரத்தன் டாடாவின் சகோதரரான ஜிம்மி நாவல் டாடா, தனிப்பட்ட முறையில் டாடா சன்ஸில் 3,262 பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 7,264 முதல் 10,089 கோடி ரூபாய் வரை உயரக்கூடும்.

Also Read

மறைந்த ரத்தன் டாடாவிடம் 3,368 பங்குகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் 7,500 முதல் 10,417 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணக்கிடப்படுகிறது. டாடா டிரஸ்ட்ஸின் தலைவரான நோயல் டாடாவிடம் 4,060 பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு சுமார் 9,041 முதல் 12,557 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணக்கிடப்படுகிறது. அதே போல சைமோன் டாடா , ஷபூர்ஜி பல்லோன்ஜி குடும்பத்தினரின் நேரடி பங்குகள் என பலரும் மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக மாற வாய்ப்புள்ளது.

Recommended For You

டாடா சன்ஸில் டாடா அறக்கட்டளை தான் 66% பங்குகளை கொண்டுள்ளது .எனவே டாடா சன்ஸ் ஐபிஓ மூலம் டாடா டிரஸ்ட்ஸின் மதிப்பு பல மடங்கு உயர்வு காணும். டாடா சனஸ் ஐபிஓ இந்தியாவின் மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே தேசிய பங்குச்சந்தை, ஜியோ என வரிசை கட்டி நிற்கும் பிரம்மாண்ட ஐபிஓக்களில் டாடா சன்ஸும் இணைந்திருக்கிறது. விரைவில் ஐபிஓ தேதி மற்றும் பிற விவரங்கள் வெளியாகும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+