டாடா ஸ்டீல் நிறுவனம் சிங்கப்பூரில் இருக்கும் தனது கிளை நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை வாங்கி உள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்தை பொருத்தவரை பல்வேறு நாடுகளிலும் துணை நிறுவனங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூரில் டாடா-வால் தொடங்கப்பட்ட துணை நிறுவனம் தான் T Steel Holdings Pte நிறுவனம்.
தற்போது டாடா ஸ்டீல் இதில் கணிசமான பங்குகளை வாங்கி முழுக்க முழுக்க தங்களின் கட்டுக்குள் இருக்கும் நிறுவனமாக மாற்றியுள்ளது. ஃபேஸ் வேல்யூ 0.157 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட 557 கோடி பங்குகளை டாடா ஸ்டீல் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 7,324.41 கோடி ரூபாய் ஆகும்.

இதன் மூலம் சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய டி ஸ்டீல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் கீழ் செயல்படக்கூடிய ஒரு முழுமையான துணை நிறுவனமாக மாறி இருக்கிறது. டாடா ஸ்டீல்ஸ் நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் திங்கட்கிழமை அன்று தாக்கல் செய்த ஆவணத்தில் இதனை தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் டாடா ஸ்டீல் நிறுவனம் தங்களுடைய வெளிநாட்டு துணை நிறுவனங்களில் கணிசமான ஈக்விட்டி பங்குகளை வாங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருந்தது. நடப்பு நிதி ஆண்டிலேயே இது நடைபெறும் எனக் கூறியிருந்தது.
அதன் ஒரு பகுதியாக தற்போது டி ஸ்டீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியுள்ளது. அண்மையில் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் கச்சா ஸ்டீல் உற்பத்தி ஓராண்டு கால இடைவெளியில் 5 சதவீதம் என்ற அளவு உயர்ந்து 5.25 மில்லியன் டன்களாக அதிகரித்தது. டாடா ஸ்டீல் நிறுவனத்தை பொறுத்தவரை சர்வதேச அளவில் பெரிய நிறுவனமாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் டி ஸ்டீல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருக்கிறது.
கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் 555 கோடி ஆகும். இதன் வருமானம் 58 ,687 கோடி ரூபாயாகும். இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் என்பது 6,601 கோடி ரூபாயாக இருக்கிறது. டாடா குழுமம் கடந்த 2006ஆம் ஆண்டு டி ஸ்டீல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை சிங்கப்பூரில் நிறுவியது. டாடா ஸ்டீல் விரைவில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications