குறிப்பாக டாடா குழுமத்தை சேர்ந்த டைட்டன் நிறுவன பங்கு விலை 2 வர்த்தக தினங்களில் (கடந்த சனி மற்றும் திங்கள்) ரூ.3,368.40லிருந்து ரூ.3,642.55ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில், பட்ஜெட் அறிவிப்பு வெளியானது முதல் இன்று காலை வரை இப்பங்கின் விலை ரூ.274.15 உயர்ந்துள்ளது. அதாவது இந்த பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பங்குக்கு ஒன்றுக்கு ரூ.274.15 லாபம் பார்த்துள்ளனர். மறைந்த பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ஜூன்ஜூன்வாலாவின் மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலா டைட்டன் நிறுவனத்தில் 1.08 சதவீதம் பங்கு மூலதனத்தை கொண்டுள்ளார். அதாவது அவர் வசம் 95.40 லட்சம் டைட்டன் பங்குகள் உள்ளன. பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகான 2 தினங்களில் இப்பங்கின் விலை ரூ.274.15 உயர்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகம் முடிவடைந்தபோது, டைட்டன் நிறுவன பங்கின் விலை ரூ.3,368.40ல் முடிவுற்றது. பட்ஜெட் தினத்தன்று (சனிக்கிழமை) இப்பங்கின் விலை ரூ.3,652-ல் நிறைவடைந்தது. இன்று காலையில் தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.3,642.55ஐ எட்டியது. கடந்த 2 தினங்களில் இப்பங்கின் விலை ரூ.274.15 உயர்வு கண்டது. இதனையடுத்து ரேகா ஜூன்ஜூன்வாலா டைட்டன் பங்குகள் வாயிலாக மட்டுமே இரண்டே தினங்களில் ரூ.261 கோடி சம்பாதித்துள்ளார்.
டைட்டன் நிறுவனத்தில் நாட்டின் மிகப்பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளரும், காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி 2.17 சதவீத பங்குகளை வைத்துள்ளது. அதாவது 1.92 கோடி பங்குகளை தன்வசம் எல்ஐசி வைத்துள்ளது. தற்போதைய பங்கு விலை உயர்வு மட்டுமே எல்ஐசி நிறுவனத்துக்கு குறைந்தபட்சம் ரூ.500 கோடிக்கு மேல் ஆதாயம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications