Tata Technologies IPO: டாடா டெக்னாலஜிஸ் இந்தியாவின் 15வது பெரிய இது மிகப்பெரிய நிறுவனமாகும். இது சமீபத்தில் ஐபிஓவுக்காக செபியிடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. தற்போது வரைவு சிவப்பு ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ் (DRHP)-ஐ செபியிடம் தாக்கல் செய்துள்ளது.
டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் தொடர்ந்து பங்கு சந்தையில், தனது பங்கினை பட்டியலிட மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.

DRHP ஆவணமானது நிறுவனத்தில் முதலீடு செய்வதால் ஏற்படும் நிதி அபாயங்கள், நிதி திரட்டுவதற்கான காரணங்கள், நிதி எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது பற்றிய முக்கியமான தகவல்கள் மற்றும் விரிவான நுண்ணறிவுகளை தகவல்களை உள்ளடக்கியது.
இந்த ஆவணமானது சமர்பிக்கப்பட்ட பின்னர், இதனை மதிப்பீடு செய்து, தேவையான மாற்றங்களை செய்ய பரிந்துரை செய்யும். இந்த மாற்றங்களை செய்த பின்னர் தான் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் தாக்கல் செய்யப்படும். இது முதலீட்டாளர்களுக்கு மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும். இதில் வணிகத்தினை பற்றிய முழுமையான தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
நிறுவனங்களின் இந்த DRHP ஆவணத்தினை செபியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வழங்கும். இதனை பங்கு சந்தைகளின் இணையதளம் மூலமாகவும் பெறலாம்.
மேலும் இந்த வரைவில் DRHP ஐபிஓ தேதி மற்றும் விலைகள், சமீபத்திய நிதி தரவு போன்ற கூடுதல் விவரங்களை கொண்டிருக்கும். ஆக இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணமானது சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஐபிஓ அனுமதியானது கிடைக்கலாம். விரைவில் இது குறித்தான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டெக்னாலஜிஸ்-ன் சந்தை மூலதனம் சுமார் 18,000 - 20,000 கோடி ரூபாயாக உள்ளது. இது ஒரு பங்குக்கு சுமார் 500 ரூபாய் என்ற லெவலிலும் உள்ளது. இது கிரே சந்தையில் புல்லிஷ் ஆக உள்ள நிலையில், இதன் விலை சுமார் 830 ரூபாயாகவும் உள்ளது.
டாடா சன்ஸ் குழுமத்தின் நிறுவனங்களுக்கு பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல மதிப்பு உள்ளது. ஆக இதன் மீதான பலத்த எதிர்பார்ப்பு என்பது சந்தையில் உள்ளது. இதன் காரணமாக டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ-க்கு பலத்த வரவேற்பு இருக்கலாம்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications