2024 ஆம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வரும் செப்டம்பர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதிக செலவுகள் காத்திருக்கும் இந்த நேரத்தில், பணத்தை முதலீடு செய்து வருமானம் ஈட்ட சில வாய்ப்புகள் உள்ளன. அதன்படி, பங்குச் சந்தையில் நீண்ட காலத்திற்கு உங்கள் போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்க சில பங்குகளை தீபாவளி நேரத்தில் வாங்குவது தனிச்சிறப்பு. முதலீட்டாளர்கள் தற்போது வலுவான வணிகத்தை கொண்ட மிட்-கேப் முதல் லார்ஜ்கேப் பங்குகளை வாங்க ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உள்நாட்டு தரகு நிறுவனமான ஆனந்த் ரதி தீபாவளி 2024 அன்று பல சிறந்த பங்குகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. இது தொழில்நுட்ப அளவுகள் மற்றும் வலுவான அடிப்படைகளின் சிறப்பான வருமானத்திற்கான திறனைக் காட்டுகிறது. எனவே தீபாவளிக்கு முன், ஆனந்த் ரதி, டாடா டெக்னாலஜிஸ், ஐஆர்பி இன்ஃப்ரா, ஹிந்துஸ்தான் ஜிங்க் மற்றும் பிஇஎம்எல் போன்ற பங்குகளை தனது தேர்வு பட்டியலில் சேர்த்துள்ளது.

IFCI லிமிடெட்:IFC நிறுவனத்தில், கடந்த சில நாட்களாக சிறப்பான நிலையில் உள்ளது. IFCI டெய்லி S4 Camarilla Pivot க்கு அருகில், 36% குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்த பிறகு, 200-நாள் EMA உடன் இணைகிறது. இது தினசரி அட்டவணையில் ஒரு நேர்மறையான ஏற்றத்தை காட்டுகிறது. எனவே, முதலீட்டாளர்கள் சுமார் 1 வருட கால முதலீட்டில் இந்த பங்குகளில் முதலீடு செய்யலாம். IFCI பங்குகளை ரூ.56 முதல் 61 என்ற விலையில் வாங்க ஆனந்த் ரதி அறிவுறுத்தியுள்ளது. இதன் இலக்கு விலை ரூ.80 முதல் 88 ஆகும். இன்று இந்த பங்கு 3.91% சரிந்து ரூ. 57.35 அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த பங்கில் 50.40% லாபம் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது
ஐஆர்பி இன்ஃப்ரா பங்குகள்: தரகு நிறுவனம் ஐஆர்பி இன்ஃப்ராவின் பங்குகளை ரூ.60 முதல் 55 கீழ் வாங்க அறிவுறுத்தியுள்ளது. இதன் இலக்கு விலை ரூ.70 முதல் 86 ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் சாத்தியமான லாபம் 49.6% என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஐஆர்பி இன்ஃப்ராவின் பங்குகள் 1.54% சரிந்து ரூ.56.42 அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.
ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட்:ஜூபிடர் வேகன்களின் பங்குகளை ரூ.525 முதல் ரூ.495 என்ற விலையில் வாங்க தரகு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதன் இலக்கு ரூ.700 முதல் ரூ.760 ஆகும். 49% அதிகரிப்பு இந்த பங்குகளில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று ஜூபிடர் வேகன் பங்கு விலை 1.61% சரிந்து ரூ.517.75 ஆக இருந்தது.
இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்:இந்துஸ்தான் ஜிங்க் பங்குகளை ரூ.520-480 வரை வாங்க ஆனந்த் ரதி அறிவுறுத்தியுள்ளது. இதன் இலக்கு விலை ரூ.680 முதல் ரூ.750 என கூறப்படுகிறது. இன்று இந்த பங்கு 2.45% சரிந்து ரூ.507.70 என்ற அளவில் வர்த்தகமாகிறது.
டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட்:தரகு நிறுவனம் டாடா டெக்னாலஜிஸ் பங்குகளை ரூ.1,080 முதல் ரூ.1,040 வரை வாங்க அறிவுறுத்தியுள்ளது. இதன் இலக்கு ரூ. 1,360 முதல் ரூ.1,450 ஆகும். இது தற்போதைய நிலையில் இருந்து 36.8% சாத்தியமான உயர்வைக் குறிக்கிறது. இன்று டாடா டெக் பங்குகள் ரூ.1,061.95 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
டாடா டெக் 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய பட்டியல் ஆதாயத்துடன் மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாகும். பட்டியலிடப்பட்ட பிறகு, பங்கு ரூ.1,400 என்ற விலையை நெருங்கியது. ஆனால் இது ரூ.1,000 க்கு கீழே சரிந்தது. இந்த பங்கு மீண்டும் உயரும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ்:கார்டன் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் பங்கு அதன் விலையில் 45% மேலே இருந்து அரித்துள்ளது. இந்த பங்கு அதன் 200 DEMA மற்றும் 61.8% retracement levelல் இருந்து மாறுகிறது. கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் பங்குகளை சுமார் ரூ.1,700 முதல் ரூ.1,780 என்ற விலையில் வாங்கவும், ரூ. 2,425 முதல் ரூ.2,650 இலக்குடன் ரூ. 1,300 ஸ்டாப் லாஸ்ஸுடன் வாங்க ஆனந்த் ரதி பரிந்துரைத்துள்ளது. இன்று இந்த பங்குகள் சுமார் 2.21% உயர்வில் ரூ.1804 ஆக வர்த்தகமாகிறது.
BEML: BEML பங்குகளை ரூ.3,700 முதல் ரூ.3,900 வரை, ரூ.4,800 முதல் ரூ.5,400 இலக்கு விலை வரம்பில், ரூ.2,975 ஸ்டாப் லாஸ் உடன் வாங்கலாம் என்று ஆனந்த் ரதி கூறியுள்ளது. இன்று இந்த பங்கு 0.54% ஏற்றத்துடன் ரூ.4060 ஆக வர்த்தகமாகிறது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications