20% உயர்வில் டாடா நிறுவன பங்கு.. 2 ஆம் காலாண்டில் சிறப்பான லாபத்தால் பங்குகள் ஒரே நாளில் டாப்..!!

டாடா குழுமத்தின் டெலிகாம் உபகரணத் துறையைச் சேர்ந்த மிட்-கேப் வகைப் பங்கு ஆன தேஜாஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு பணமழை பொழிகிறது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் 20 சதவிகிதம் உயர்ந்து, அப்பர் சர்க்யூட்டில் உச்சம் தொட்டு வர்த்தகம் செய்யப்பட்டன.

நடப்பு நிதியாண்டின் செப்டம்பரில் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் நல்ல நிதி முடிவுகளை அறிவித்ததை அடுத்து, நிறுவனத்தின் பங்குகளில் பெரும் ஏற்றம் காணப்பட்டது. மறுபுறம், நிறுவனத்தின் பங்கு அதன் முதலீட்டாளர்களுக்கு கடந்த ஆண்டில் 47 சதவீத லாபத்தை அளித்துள்ளது.

20% உயர்வில் டாடா நிறுவன பங்கு..  2 ஆம் காலாண்டில் சிறப்பான லாபத்தால் பங்குகள் ஒரே நாளில் டாப்..!!

நிறுவனம் செப்டம்பர் 2025 இல் முடிவடைந்த இரண்டாவது காலாண்டிற்கான நிதி முடிவுகளை அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) ரூ. 275 கோடி ஆகும். இது சென்ற ஆண்டின் இதே காலாண்டின் அடிப்படையில் ரூ.13 கோடி சரிவாகும். மேலும் செப்டம்பரில் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாடுகளின் வருவாய் ரூ. 2811 கோடி பதிவு செய்யப்பட்டது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டின் அடிப்படையில் ரூ. 396 கோடி அதிகரிப்பு ஆகும். அதாவது கடந்த ஆண்டை விட நிறுவனத்தின் வருவாய் 6 சதவிகிதங்கள் அதிகரித்துள்ளது.

பங்குகளை பொருத்தவரையில், இன்றைய வர்த்தகத்தில் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 20 சதவீதம் உயர்ந்து ரூ. 1425 இல் வர்த்தகம் செய்யப்படுகிறது. 52 வாரங்களில் அதிகபட்ச விலையாக ரூ. 1495 ஆகவும், அதே போல் 52 வார குறைந்தபட்ச விலை ரூ. 651.25 ஆகவும் உள்ளது.

பங்கு விலை கடந்த ஒரு வாரத்தில் சுமார் 8 சதவீதமும், கடந்த மாதத்தில் சுமார் 5 சதவீதமும், கடந்த ஆறு மாதங்களில் சுமார் 43 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டில் சுமார் 57 சதவீதமும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 1677 சதவீதமும் உயர்ந்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 22,210 கோடி ஆகும்.

தேஜாஸ் நெட்வொர்க்ஸ் லிமிடெட் என்பது நாட்டின் முன்னணி வணிகக் குழுவான டாடா குழுமத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனமாகும். நிறுவனம் முதன்மையாக டெலிகாம் துறைக்கான வயர்லைன் மற்றும் வயர்லெஸ் நெட்வொர்க்கிங் தயாரிப்புகளை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது. தற்போது இந்த நிறுவனம் பெங்களூரில் இருந்து செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஜூன் 2024க்குள் மொத்தம் 1843 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இதற்கிடையில், தற்போதைய 2.00 மணி நிலவரப்படி தேஜாஸ் நெட்வொர்க்ஸின் பங்குகள் சுமார் 9.40% அதிகரித்து ரூ.1299.40 ஆக வர்த்தகமாகி வருகிறது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+