நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் (HCL) டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்கள், கடந்த நிதியாண்டிற்கான இறுதி டிவிடெண்டுகளை வரும் வாரத்தில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கூறிய இந்த முன்னணி ஐடி நிறுவனங்கள் இந்த அறிவிப்பினை அதன் 4ம் காலாண்டு முடிவானது வெளியாகும்போது, அறிவிக்கப்படலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.
ஹெச்சிஎல் டெக்னாலஜி
ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டமானது ஏப்ரல் 20 மற்றும் 21, 2022 தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதன் நிதியறிக்கை பற்றி விரிவாக விவாதிக்கப்படலாம். அதோடு டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது குறித்த முக்கிய அறிவிப்பும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனம் மார்ச் 31 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதியறிக்கை மற்றும் 4வது காலாண்டு அறிக்கை பற்றிய விவாதம், ஏப்ரல் 11 அன்று அதன் நிர்வாக குழு கூட்டத்தின் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது. ஆக இந்த கூட்டத்தில் டிவிடெண்டுகள் பற்றி விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் கடந்த நிதியாண்டிற்காக இறுதி டிவிடெண்ட் மற்றும் வேறு ஏதேனும் ஈக்விட்டி பற்றிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனம் ஏப்ரல் 13 அன்று அதன் 4வது காலாண்டு அறிக்கையினை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் 4வது காலாண்டு அறிக்கை மட்டும் அல்ல, கடந்த நிதியாண்டிற்கான ஒருங்கிணைந்த அறிக்கையும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின்போது, டிவிடெண்ட் பற்றிய முக்கிய அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்சிஎல் நிலவரம்
ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது NSE-யில் சற்று அதிகரித்து, 1174.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.இதன் இன்றைய உச்சம் 1179.90 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 1168 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 1377.75 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 891 ரூபாயாகும். இதே BSE-யில் இப்பங்கின் விலையானது சற்று அதிகரித்து 1174 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
டிசிஎஸ் நிலவரம்
டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது NSE-யில் பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்து, 3767.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.இதன் இன்றைய உச்சம் 3780 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 3737.10 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 4043 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 3004 ரூபாயாகும். இதே BSE-யில் இப்பங்கின் விலையானது சற்று அதிகரித்து 3766.25 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
இன்ஃபோசிஸ் நிலவரம்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது NSE-யில் 1.26% குறைந்து, 1881.40 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.இதன் இன்றைய உச்சம் 1893 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 1873 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 1953.90 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 1311.30 ரூபாயாகும். இதே BSE-யில் இப்பங்கின் விலையானது சற்று குறைந்து, 1881.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications