டிசிஎஸ் முதல் இன்ஃபோசிஸ் வரை.. ஐடி துறையில் ஜொலிக்கும் பங்குகள்.. எந்த பங்குகளை வாங்கலாம்?

பங்குச் சந்தையில் முன்னணி தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் பல ஐடி பங்குகளில் வாங்குவதற்கான மதிப்பீட்டை கொடுத்துள்ளது. அதன்படி ஐடி துறை பங்குகளின் விலை இலக்குகளை கணிசமாக உயர்த்தியுள்ளது. ஐடி பங்குகளில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், எல்டிஐ மைண்ட்ரீ, கோஃபோர்ஜ் மற்றும் பல நிறுவனங்களின் மதிப்பீடுகள் உயர்ந்து உள்ளன. நீண்ட காலமாக விருப்பமான செலவினக் குறைப்புகளைத் தாங்கிய பிறகு, தகவல் தொழில்நுட்பத் துறை மீட்சியானது உச்சத்தில் இருக்கக்கூடும் என்று மோதிலால் ஓஸ்வால் கூறியுள்ளது.

குறிப்பாக, டிசிஎஸ்ஸில், வாங்கும் மதிப்பீட்டை ரூ.4,660ல் இருந்து ரூ.5,400க்கு உயர்த்தியுள்ளது.இன்ஃபோசிஸில் வாங்குதல் மதிப்பீட்டிடுடன் இலக்கு விலையைரூ.2,000 லிருந்து ரூ.2,200 ஆக உயர்த்தியுள்ளது. அதேபோல், நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்கில் வாங்குதல் மதிப்பீட்டுடன் இலக்கு விலையை 2,000 ரூபாயில் இருந்து 2,200 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

டிசிஎஸ் முதல் இன்ஃபோசிஸ் வரை.. ஐடி துறையில் ஜொலிக்கும் பங்குகள்.. எந்த பங்குகளை வாங்கலாம்?

இது அடுத்த மூன்று ஆண்டுகளில் பெரிய நிறுவனங்களிடையே வருவாய் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என மதிப்பிடுகிறது. மேலும், எல்டிஐ மைண்ட்ரீ இல், வாங்குதல் மதிப்பீட்டுடன் இலக்கு விலையை ரூ.7,000-லிருந்து ரூ.7,400 க்கு உயர்த்தியுள்ளது. பங்குகளின் நேர்மறைக் கண்ணோட்டம், அவற்றின் தரவுகள் அடிப்படையில், ஈஆர்பி நவீனமயமாக்கல் ஆகியவற்றில் சிறந்த தரச் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறியுள்ளது. டெக் மஹிந்திராவின் இலக்கை ரூ.1,470ல் இருந்து ரூ.1,600 ஆக உயர்த்தியுள்ளது.

மோதிலால் ஓஸ்வால், கோபோர்ஜில், அதன் மதிப்பீட்டை நியூட்ரலில் இருந்து வாங்குவதற்கு மதிப்பீட்டு, அதன் இலக்கை ரூ.6,100ல் இருந்து ரூ.8,100 ஆக உயர்த்தியுள்ளது. எல்&டி டெக் நிறுவனத்தில் வாங்கும் மதிப்பீட்டுடன் இலக்கை ரூ.6,300ல் இருந்து ரூ.6,600 ஆக உயர்த்தியுள்ளது. அதேபோல், சியாண்ட், நிறுவனத்தில் வாங்குதல் மதிப்பீட்டுடன் இலக்கை ரூ.2,070ல் இருந்து ரூ.2,300 ஆக உயர்த்தியுள்ளது. தொடர்ந்து விப்ரோ மற்றும் ஜென்சார் டெக் ஆகியவற்றில் மோதிலால் ஓஸ்வால் ரூ.500 மற்றும் ரூ.760 என்ற இலக்குக்கு நியூட்ரல் மதிப்பீட்டை கொடுத்துள்ளது.

இதற்கிடையில், இன்று அனைத்து ஐடி பங்குகளும் பாசிட்டிவ் ஆக வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக கோபோர்ஜ் பங்கு ஆனது இன்றைய வர்த்தகத்தில் 11.40 மணியளவில் சுமார் 4.44% உயர்ந்து ரூ.6773 ஆக விற்பனையாகி வருகிறது. அதேபோல், விப்ரோ டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், எல்டிஐ மைண்ட்ரீ மற்றும் டிசிஎஸ், இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+