டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் சரிவில் காணப்படுகின்றன. மேற்கோண்டு ஐடி துறையில் தாக்கம் இருக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக அமெரிக்கா போன்ற மேக்ரோ பொருளாதாரங்களில் சரிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வருவாயில் வீழ்ச்சியினை கண்டுள்ளன.
நடப்பு ஆண்டில் இதுவரையில் ஐடி இன்டெக் ஆனது 27% மேலாக சரிவினைக் கண்டுள்ளது
டிசிஎஸ் சரிவு
இந்த கால கட்டத்தில் நாட்டின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் வரவாறு காணாத சரிவினை கண்டுள்ளது. இது 2973 ரூபாய் என்ற லெவலை கடந்த ஜூலை மாதம் எட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இது வரையில் டிசிஎஸ் பங்கு விலையானது 20% மேலாக வீழ்ச்சி கண்டுள்ளது.
டிசிஸ், இன்ஃபோசிஸ் மட்டுமல்ல, மற்ற ஐடி பங்குகளின் விலையும் மோசமான சரிவினைக் கணடுள்ளது.
டிசிஎஸ் வருவாய்
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் டிசிஎஸ்-ன் லாபம் 5% அதிகரித்து காணப்பட்டது. எனினும் நிபுணர்களின் இலக்கினை எட்டவில்லை. இது அதிகரித்த ஊழியர்களின் எண்ணிக்கை, வருவாயில் சரிவு, தேவை என பல காராணிகளுக்கு மத்தியில் ஏற்றம் கண்டிருந்தது. எனினும் செலவினங்கள் அதிகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்ஃபோசிஸ்
இதே மற்றொரு முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது வியாழக்கிழமையன்று தொடக்கத்தில் 1360 ரூபாய் என்ற 52 வார குறைபட்ச லெவலை எட்டியது. இப்பங்கின் விலையானது நடப்பு ஆண்டில் 27% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இதன் ஜூன் காலாண்டு லாபம் எதிர்பார்ப்பினை விட குறைந்திருந்த நிலையில், இதன் லாபம் 3% மட்டுமே அதிகரித்திருந்தது. இதன் செலவின அதிகரிப்புக்கு மத்தியில் மார்ஜினிலும் தாக்கம் இருந்தது. இதற்கிடையில் தான் இதன் பங்கு விலையும் சரிவில் காணப்பட்டது.
ஓவர்சோல்டு லெவல்
டிசிஎஸ், இன்ஃபோசிஸ் என இரு பங்குகளுமே ஓவர்சோல்டு லெவலில் காணப்படுகின்றன. தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு மேற்கொண்டு டாலரின் மதிப்பு உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், ரூபாயின் மதிப்பும் சரிவினை எட்டியுள்ளது. ஐடி துறையினை பொறுத்தவரையில் ரூபாய் வீழ்ச்சியும் சாதகமாக இருப்பதால், இது பங்குக்கு சாதகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாங்கலாமா?
ஆக மேற்கண்ட ஐடி பங்குகளை தற்போதைய நிலையில் வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். டிசிஎஸ்-க்கு ஸ்டாப் லாஸ் ஆக 2750 ரூபாயினை வைத்துக் கொள்ள நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். டிசிஎஸ் பங்குகள் நீண்டகால நோக்கில் ஏற்றம் காண கூடியவை.'இதே இன்ஃபோசிஸ்- ன் முக்கிய சப்போர்ட் லெவல் 1330 ரூபாயாகும். இதே டிசிஎஸ்-ன் உடனடி ரெசிஸ்டன்ஸ் லெவல் 2960 ரூபாயாகும். அடுத்த இலக்கு 3140 ரூபாய் எனவும் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications