மும்பை: இந்திய பங்கு சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தின் மத்தியில், தற்போதைக்கு முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்ற மன நிலையே பலரின் மத்தியில் இருந்து வருகின்றது.
குறிப்பாக இந்த காலகட்டத்தில் டெக்னாலஜி பங்குகளை வாங்கலாமா? வேண்டாமா? என்ற பலத்த கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனெனில் சர்வதேச அளவில் நிலவில் வரும் சவால்களுக்கு மத்தியில் ஐடி துறையின் தேவையானது மீண்டும் குறையலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
முக்கிய காரணிகள்
இதற்கிடையில் அண்டை நாடுகளில் பெரியளவில் சேவைகளை செய்து வரும் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் நிலை என்ன? அவற்றின் பங்குகளின் விலை நிலவரம் என்ன? வாங்கலாமா? அல்லது விற்பனை செய்யலாமா? அடுத்து என்ன செய்யலாம்? என பல கேள்விகள் எழுந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வங்கிகளில் நிலவி வரும் நெருக்கடி நிலை என்பது மேலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
பல கேள்விகள்
ஆக இப்படி ஒரு நெருக்கடியான சூழலில் இந்திய ஐடி நிறுவன பங்குகள் விலை எப்படி இருக்கும். வாங்கலாமா? வேண்டாமா? இருக்கும் பங்குகளை என்ன செய்யலாம். விற்பனை செய்து விட்டு வெளியேறலாமா? அல்லது ஹோல்டு செய்யலாமா? என பல கேள்விகள் எழுந்துள்ளது.
மோதிலால் ஆஸ்வால் கருத்து?
மோதிலால் ஆஸ்வால் நிலைமை சரியாகும் வரையில் வங்கிகள் எச்சரிக்கையான இருக்கலாம். அவர்களின் ஐடி செலவினங்களை குறைக்கலாம். ஆக இது 2024ம் நிதியாண்டின் முதல் பாதியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதன் தாக்கம் என்பது ஐடி நிறுவனங்களில் முதல் பாதியில் இருக்கலாம். ஐடி நிறுவனங்கள் அழுத்ததினை எதிர்கொள்ளலாம் என கணித்துள்ளது.
எப்போது சீரடையலாம்
எப்படியிருப்பினும் இரண்டாம் பாதியில் நிலைமை சீரடையலாம். தேவையானது படிப்படியாக மீண்டு வரலாம். 2025ம் நிதியாண்டில் தேவை வலுவாக அதிகரிக்கலாம்.
ஆக அப்போது ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி என்பது துரிதமாகலாம். ஆனால் மீடியம் டெர்மில் சற்றே தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என கணித்துள்ளது.
டிசிஎஸ்
ஐடி நிறுவனங்களில் வழக்கம்போல டிசிஎஸ் சிறந்த பங்காக இருக்கலாம். இதனை தொடர்ந்து ஹெச்.சி.எல் டெக் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சிறந்த பங்குகளாக உள்ளன.
ஐடி செலவு குறைப்பின் தாக்கம் என்பது இருக்கலாம். மேலும் பரவி வரும் கொரோனாவின் தாக்கம் என்பதும் இருக்கலாம். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் செலவு குறைப்பு என்பதும் இருக்கலாம். இது அடுத்த 3 - 4 காலாண்டுகளுக்கு தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. எப்படியிருப்பினும் நடப்பு ஆண்டில் டிசிஎஸ் பங்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.
இன்ஃபோசிஸ்
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனம் இதன் 12 மாத இலக்கு விலையினை 1759 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது முன்னதாக 1772 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய லெவலில் இருந்து 28% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1 மாதத்தில் மட்டும் இப்பங்கின் விலையானது 7% சரிவினைக் கண்டுள்ளது. எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் எனவும், இதற்கிடையில் இப்பங்கினை Buy என தரகு நிறுவனம் கணித்துள்ளது. இன்ஃபோசிஸ் வேகமாக வளர்ந்து வரும் ஒரு லார்கேப் ஐடி நிறுவனமாகும்.
விப்ரோ
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனம் விப்ரோவின் இலக்கு விலையினை தரகு நிறுவனம் குறைத்துள்ளது. குறிப்பாக வங்கித் துறை உள்ளிட்ட முக்கிய வருமானம் ஈட்டும் பகுதிகள் சரிவினைக் கண்டுள்ளன. எனினும் தரகு நிறுவனம் இப்பங்கினை ஹோல்டு செய்யலாம் என தெரிவித்துள்ளது. இதன் இலக்கு விலை 12 மாதத்திற்கு 410 ரூபாயில் இருந்து 355 ரூபாயாக குறைத்துள்ளது.
மற்ற பரிந்துரைகள்
டிசிஎஸ் (வாங்கலாம்)
இன்ஃபோசிஸ் (வாங்கலாம்)
விப்ரோ (ஹோல்டு)
ஹெச்.சி.எல் டெக் (வாங்கலாம்)
டெக் மஹிந்திரா ( நியூட்ரல்)
எல்டிஐ மைண்ட் ட்ரீ ( நியூட்ரல்)


Click it and Unblock the Notifications