இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான TCS (Tata Consultancy Services), 2026 நிதியாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு ஒட்டுமொத்த பங்குச் சந்தையையும் அதிர வைத்துள்ளது. ஐடி துறையில் நிலவும் மந்தநிலையை முறியடித்து, கடந்த ஆண்டை விட 12% லாப உயர்வை பதிவு செய்து டாடா பிராண்டானது கெத்து காட்டியுள்ளது.
இந்த மிரட்டலான லாப உயர்வால் முதலீட்டாளர்கள் உற்சாகத்தில் இருக்க, மறுபுறம் ஊழியர்களுக்கு காத்திருக்கிறது ஒரு செம குட் நியூஸ். இந்த முறை சம்பள உயர்வு (Appraisal) எப்படி இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ஐடி ஊழியர்களுக்கு, நிறுவனத்தின் இந்த அபார வளர்ச்சி புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. டிவிடெண்ட் மழை, புதிய ஆர்டர்கள், மற்றும் ஏஐ (AI) தொழில்நுட்பத்தில் டிசிஎஸ் செய்துள்ள மாயாஜாலம் என இந்த மார்ச் காலாண்டு முடிவுகளில் ஒளிந்திருக்கும் அந்த 5 ரகசியங்கள் என்ன? ஏன் முதலீட்டாளர்கள் இவ்வளவு ஹாப்பியாக இருக்கிறார்கள்? விரிவாகப் பார்ப்போம்.

டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், கடந்த ஆண்டை காட்டிலும் மார்ச் காலாண்டில் 12.2% அதிகரித்து, 13,718 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 12,224 கோடி ரூபாயாக இருந்தது. இது ஐடி துறையில் நிலவி வரும் மந்தமான சூழலுக்கு மத்தியிலும் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது கவனத்தில் கொள்ள வேண்டியதாகப் பார்க்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த வருவாய் வளர்ச்சியானது 9.6% அதிகரித்து, 70,698 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 2025ம் நிதியாண்டில் 64,479 கோடி ரூபாயாக காணப்படுகிறது. இதே முந்தைய காலாண்டை காட்டிலும் லாபம் 28.7% அதிகரித்தும் வருவாய் 5.4% அதிகரித்தும் காணப்படுகிறது.
தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மூன்று மிகப்பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ஆர்டர்கள் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. எங்கள் ஐந்து பில்லர் உத்தி மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மற்றும் சிறந்த சேவைகள் தொடர்ந்து வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள உதவின. உலகளாவிய அளவில் பல்வேறு சவால்கள் நிலவினாலும், தொழில்நுட்ப முதலீடுகள் மீது வாடிக்கையாளர்கள் கொண்ட நம்பிக்கை, எங்களுக்கு புதிய வாய்ப்புகளை கொடுக்கிறது என டிசிஎஸ்-ந் தலைமை செயல் அதிகாரியான கே கிருதிவாசன் தெரிவித்துள்ளார்.
கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?
பங்குச்சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையின் படி, ஐடி நிறுவனம் வருவாய் வளர்ச்சியானது கடந்த காலாண்டை காட்டிலும் 12% அதிகரித்துள்ளது.
செயல்பாட்டு வருமானம் 7.6% குறைந்து 15,601 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது. எனினும் செயல்பாட்டு மார்ஜின் 10 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து, 25.3% ஆக ஏற்றம் கண்டுள்ளது.
இதே 2026ம் நிதியாண்டு நிலவரப்படி பார்க்கும்போது, வருவாய் வளர்ச்சி கடந்த ஆண்டை பார்க்கும்போது 4.6% வளர்ச்சி கண்டுள்ளது. இதன் மூலம் நிலையான நாணய மதிப்பு அடிப்படையில் 30 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த வருவாய் 2,67,021 கோடி ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இதே செயல்பாட்டு மார்ஜின் வரமானது 25% உயர்ந்துள்ளது. இது கடந்த வருடத்தை காட்டிலும் 70 அடிப்படை புள்ளிகள் அதிகம். இது கடந்த 4 ஆண்டுகளில் எட்டிய உயர்ந்த வளர்ச்சி வரம்பாகும்.
கடந்த காலாண்டில் சிறப்பான ஒப்பந்தங்களை பெற்றுள்ள நிறுவனம், 12 பில்லியன் டாலர் மதிப்பிலும், கடந்த 2026ம் நிதியாண்டில் 40.7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளது. இது மார்ச் காலாண்டில் மூன்று மிகப்பெரிய ஒப்பந்தத்தையும், கடந்த நிதியாண்டில் 5 மெகா ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளது.
சிறப்பான செயல்பாடுகளுக்கு மத்தியில் நிறுவனம் 2026ம் நிதியாண்டிற்கான ஒரு பங்கிற்கு 31 ரூபாய் இறுதி டிவிடெண்டாகவும் அறிவித்துள்ளது. இது விரைவில் ஒப்புதல் பெற்ற பிறகு, முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2026ம் நிதியாண்டில் டிசிஎஸ் தனது முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஒரு பங்குக்கு 57 ரூபாய் நிதியை வழங்கியது. இதில் இடைக்கால டிவிடெண்டாக 11 ரூபாயும், சிறப்பு டிவிடெண்டாக 46 ரூபாயும் அடங்கும். ஆக மொத்தம் ஒரு பங்குக்கு 109 ரூபாய் டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 28, 2004 முதல் இதுவரை டிசிஎஸ் நிறுவனம் மொத்தம் 93 முறை டிவிடெண்ட் வழங்கியுள்ளது.
கடந்த 2026ம் நிதியாண்டு முழுமையாக பார்க்கும் போது நிகர லாபம் 49,210 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 48,553 கோடி ரூபாயாக இருந்தது. இதனிடையே இன்று டிசிஎஸ் பங்கு விலையானது 1% மேல் அதிகரித்து, 2589 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications

