TCS: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், வியாழக்கிழமையன்று காலை தொடக்கத்திலேயே சற்றே சரிவில் காணப்படுகின்றது.
இது டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியானதை அடுத்து, இன்று பங்குகள் சரிவில் காணப்படுகின்றது.இது நிபுணர்களின் மதிப்பீட்டினை காட்டிலும் லாபமானது குறைந்துள்ள நிலையில், பங்கு விலையும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

தற்போது 12.41 மணி நிலவரப்படி, என் எஸ் இ-யில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் 1.60% குறைந்து, 3189.75 ரூபாயாக இருந்தது. இதன் உச்ச விலை 3230 ரூபாயாக உள்ளது. இன்றைய குறைந்தபட்ச விலை 3180 ரூபாயாகும்.
பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 1.59% குறைந்து, 3190.60 ரூபாயாகவும் உள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 3226 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 3181.05 ரூபாயாகும்.
டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த காலாண்டில் 14.8% அதிகரித்து, 11,392 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிபுணர்கள் 11,530 கோடி ரூபாயாகவும் இருக்கலாம் என கணித்துள்ளனர்.
இதே ஜனவரி - மார்ச் காலாண்டில் ஆர்டர் புத்தகத்தில் 10 பில்லியன் டாலர் ஆக உள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 11.5% குறைந்துள்ளது. எனினும் மிகப்பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் என்பது புதிய உச்சத்தினை இதுவரையில் அளவுக்கு எட்டியுள்ளது. இது முன்னதாக 7 பில்லியன் டாலர் - 9 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு இருந்தது.

செயல்பாட்டின் மூலம் கிடைக்கும் வருவாய் விகிதமானது 17% அதிகரித்துள்ளது. டிசிஎஸ் முதல் நிறுவனமாக கடந்த காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ஐடி துறையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நிலவி வரும் பதற்றம் காரணமாக, அதன் தாக்கம் என்பது சற்றே காணப்படுகின்றது. இது அடுத்து வரும் காலாண்டுகளிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுவாமா: சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், தேவையானது சரியலாம் என்ற கவலையானது இருந்து வருகின்றது. எப்படியிருப்பினும் சர்வதேச அளவிலான ஒப்பந்தங்கள் என்பது மெதுவாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த போக்கானது வரவிருக்கும் காலாண்டுகளிலும் தொடர்ந்தால் ஐடி துறையானது தொடர் வளர்ச்சி காணலாம்.

இந்த தேவையில் டிசிஎஸ் மிகப்பெரிய ஒரு பயனாளியாக இருக்கலாம். இது மீடியம் டெர்மிலும் மற்றும் நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இலக்கு விலையாக 3750 ரூபாயாக கணித்துள்ளது. இது முந்தைய இலக்கு விலை 4100 ரூபாயாகவும் மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications