மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த வாசகம் இன்று இந்திய ஐடி துறையின் இதயத்துடிப்பாக மாறியிருக்கிறது. ஒரு காலத்தில் மென்பொருள் சேவைகளில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்தியாவின் மூன்று பெரும் ஜாம்பவான்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் ஹெச்சிஎல் டெக் இன்று ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கின்றன. இது வெறும் அடுத்த காலாண்டு வருமானத்திற்கான போட்டி அல்ல; இது அடுத்த ஒரு தசாப்த கால உலகளாவிய தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கான வாழ்வா-சாவா போராட்டம்.

கண்களுக்குத் தெரியாத ஒரு பனிப்போர் இப்போது அலுவலக கண்ணாடி கட்டிடங்களுக்குL அரங்கேறி வருகிறது. 2.4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த பிரம்மாண்டமான AI கட்டமைப்பு எனும் அரியணையில் அமர போவது யார்? இது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல. லட்சக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம், கோடிக்கணக்கான முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் டிஜிட்டல் இந்தியாவின் உலகளாவிய அடையாளம் என அனைத்தும் இந்தப் போரின் முடிவில் தான் தங்கியிருக்கிறது. இந்த மூன்று துருவங்களில், செயற்கை நுண்ணறிவு எனும் மந்திரக்கோலை சரியாகச் சுழற்றி, உலகிற்குத் தலைமை தாங்க போகும் அந்த ஏஐ கிங் யார்? வாருங்கள் பார்க்கலாம்.
டிசிஎஸ்
டாடா குழுமத்தின் அங்கமான டிசிஎஸ் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாகும். தற்போது அதைத் தாண்டி ஒரு மிகப்பெரிய இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. அது உலகின் மிகப்பெரிய ஏஐ தொழில்நுட்பம் தலைமையிலான நிறுவனம் என்ற அஸ்தஸ்தை பெறுவது தான். வெறுமனே மேலோட்டமான மாற்றங்களைச் மட்டும் செய்யாமல், ஆழ்ந்த வியூகத்தை கையில் எடுத்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் டிசிஎஸ்-ந் ஏஐ சேவைகள் மூலமான வருவாய் வளர்ச்சியானது மலைக்க வைக்கிறது. அதன் வருவாய் விகிதமானது 1.8 பில்லியன் டாலராகும். இந்திய மதிப்பில் சுமார் 16,200 கோடி ரூபாயாகும். இது வெறும் ஆரம்பம் தான் என கூறும் நிபுணர்கள், டிசிஎஸ் தனது 2.1 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு ஏஐ பயிற்சியை அளித்து, அவர்களை உலகத்தரம் வாய்ந்த "AI நிபுணர்களாக" மாற்றியுள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் எந்தவொரு சிக்கலான தேவையையும் எதிர்கொள்ள டாடா குழுமம் தயாராக உள்ளது.
இன்ஃபோசிஸ்
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், தற்போது 500-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஏஐ ஏஜென்ட்களை உருவாக்கியுள்ளது. இந்த ஏஜென்ட்கள் மனித தலையீடு இன்றி சிக்கலான பணிகளை செய்யும் திறன் கொண்டவை. ஏற்கனவே நிறுவனத்தின் டாப் 200 வாடிக்கையாளர்களில் 90%-க்கும் அதிகமானோர், அதனுடன் இணைந்து AI திட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். இது இன்போசிஸ் மீதான நம்பிக்கையை காட்டுகிறது.
ஏஐ ஏஜென்ட்கள், மேம்பட்ட மென்பொருள் உருவாக்கம் மற்றும் துறைசார் அறிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, முன்பு நஷ்டம் தரும் என்று கருதப்பட்ட பல நவீனமயமாக்கல் திட்டங்களை இப்போது லாபகரமானதாக மாற்றியுள்ளது. இதன் விளைவாக, ஏஐ மாடல்கள் மற்றும் கோடிங் துறையில் சிறந்து விளங்கும் பல சிறிய நிறுவனங்களுடன் இன்போசிஸ் அடுத்தடுத்து கூட்டணிகளை அமைத்து வருகிறது. இப்படி பல்வேறு வளர்ச்சிக்கான பணிகளுக்கு மத்தியில் இன்ஃபோசிஸ் பங்கு, கவனத்தில் கொள்ள வேண்டியதாக பார்க்கப்படுகிறது.
ஹெச் சி எல் டெக்
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச் சி எல் டெக்னாலஜிஸ், தனது வளர்ச்சிப் பாதையில் ஏஐ-ஐ ஒரு மிக முக்கிய அங்கமாக மாற்றியுள்ளது. சேவை மாற்றம், மேம்பட்ட ஏஐ (Advanced AI) மற்றும் பாரம்பரிய ஏஐ (Classical AI) என அனைத்து பிரிவுகளிலும் AI-ஐ இந்நிறுவனம் ஒருங்கிணைத்து உள்ளது.
இதனிடையே ஏற்கனவே மூன்றாவது காலாண்டில் அபாரமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக மேம்பட்ட ஏஐ பிரிவில் கடந்த காலாண்டை விட 20% வளர்ச்சி கண்டு, 146 மில்லியன் டாலர் வருவாயை எட்டியுள்ளது. இதே மொத்த வருவாய் 3,293 மில்லியன் டாலராகவும் பதிவு செய்துள்ளது. இதற்கு ஏஜென்டிக் பிசிகல் AI மற்றும் AI பேக்டரி திட்டங்களில் கிடைத்த பெரும் வரவேற்பே இந்த வளர்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஏஐ துறையில் கவனம் செலுத்தி வரும் நிறுவனம், AI வளர்ச்சி என்பது மற்ற நிறுவனங்களை விட மிகவும் தனித்துவமானது. குறிப்பாக சாப்ட்வேர் என்பதை தாண்டி, உள்கட்டமைப்பு மற்றும் ஹார்டுவேர் சார்ந்த AI-இல் அதிக கவனம் செலுத்துகின்றது.
மேற்கண்ட மூன்று நிறுவனங்களுமே ஏஐ-யில் வெவ்வேறு வியூகங்களை கொண்டுள்ளன. இருப்பினும் முதலீட்டு ரீதியாக பார்க்கும்போது மேற்கண்ட ஒவ்வொரு பங்கிலும் பிரித்து முதலீடு செய்யலாம். ஏனெனில் அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளன. ஆக சரியான ஆலோசனையுடன் திட்டமிடல் சிறப்பு.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications