நடப்பு ஆண்டில் ஐபிஓ-க்களின் வெளியீடு என்பது கடந்த ஆண்டினை காட்டிலும் பெரும் அளவிலான நிறுவனங்கள் செய்துள்ளது. இதில் ஒரு சில நிறுவனங்கள் தவிர, பல நிறுவனங்கள் தொடக்கத்திலேயே முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தினை கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட தேகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதல் நாளே முதலீட்டாளார்களுக்கு நல்ல லாபத்தினை கொடுத்துள்ளது.
பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் முதல் நாளான இன்று 67.77% பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
பட்டியல் எப்போது?
இது பி.எஸ்.இ-யில் 753 ரூபாயாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பங்கு விலையானது 453 ரூபாயாகும். இதே என்.எஸ்.இ-யில் ஒரு பங்கின் விலை 760 ரூபாயாகும். 619 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வெளியீட்டினை செய்தது குறிப்பிடத்தக்கது.
பல மடங்கு விண்ணப்பம்
சுரங்கத் தொழிலுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தேகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 219.04 மடங்கு விண்ணப்பங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து 215.45 மடங்கு விண்ணப்பமும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 666.19 மடங்கும், சில்லறை முதலீட்டாளர்கள் 29.44 மடங்கும் விண்ணப்பம் செய்திருந்தனர்.
யார் பங்கு விற்பனை
ஐபிஓ டிசம்பர் 1 அன்று தொடங்கிய நிலையில், டிசம்பர் 3 அன்று முடிவடைந்தது. இந்த பங்கு வெளியீட்டில் 1,36,69,478 கோடி பங்குகள் விற்பனை செய்யட்டது இதில் புதிய வெளியீடு என எதுவும் கிடையாது. ஏற்கனவே இந்த நிறுவனத்தின் பங்கினை வைத்துள்ள பங்குதாரர்கள் மற்றும் புரோமோட்டர்களிடம் உள்ள பங்கினை தான் விற்பனை செய்துள்ளனர்.
வளர்ச்சி காணலாம்
இந்த நிறுவனத்தின் வலுவான வளர்ச்சி வாய்ப்புகள், வலுவான அடிப்படைகள், செயல்பாட்டு பிரிவு மற்றும் குறைந்த போட்டி ஆகியவற்றை மேற்கோள்காட்டி, பல நிபுணர்களும் இந்த பங்கினை வாங்க பரிந்துரை செய்தனர். இந்த துறையில் இந்த நிறுவனம் முன்னிலையில் உள்ளதால் வணிக வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications