டெக் மகேந்திரா முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. சூப்பர் அறிவிப்பு.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

நாட்டின் ஐந்தாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான டெக் மகேந்திரா அதன் இரண்டாம் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.

ஐடி நிறுவனங்கள் பலவும் இரண்டாவது காலாண்டில் லாபத்தில் இருந்தாலும், முந்தைய ஆண்டினை காட்டிலும் குறைந்துள்ளன. இது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், இனி வரவிருக்கும் காலாண்டுகளில் எப்படியிருக்குமோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டெக் மகேந்திரா லாபம்

டெக் மகேந்திரா லாபம்

டெக் மகேந்திரா நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் கடந்த ஆண்டினை காட்டிலும் ஒருங்கிணைந்த வரிக்கு பிந்தைய லாபம் 4% குறைந்து, 1285.4 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இது கடந்த ஆண்டில் 1338.7 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே ஜூன் காலாண்டினை காட்டிலும் 13.6% அதிகரித்துள்ளது எனலாம். இது ஜூன் காலாண்டில் 1131.6 கோடி ரூபாயாக இருந்தது.

டிவிடெண்ட்

டிவிடெண்ட்

இந்த காலாண்டு முடிவுகளுக்கு மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பு வரலாம் என்பது தான். எதிர்பார்த்ததை போலவே சிறப்பு டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 18 ரூபாயினை அறிவித்துள்ளது. இது அதன் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

வருவாய் விகிதம்

வருவாய் விகிதம்

லாபம் சற்று குறைந்திருந்தாலும் இதன் வருவாய் விகிதமானது 20.6% அதிகரித்து, 13,129.50 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 10,881.30 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வலுப்படுத்தி வருகிறோம்

வலுப்படுத்தி வருகிறோம்

தொடர்ந்து நீண்டகால நோக்கில் எங்களது மக்களுக்கு, நீண்டகால மதிப்பினை உறுதி செய்வதற்காக நாங்கள் தொடர்ந்து நெகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருப்பதில் கவனம் செலுத்தி வருகின்றோம்.

சந்தையில் சவாலான நிலை இருந்து வரும் நிலையில், நாங்கள் தொடர்ந்து எங்களை வலுப்படுத்தி வருகின்றோம் என டெக் மகேந்திராவின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சிபி குர்னானி கூறியுள்ளார்.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

டெக் மகேந்திராவின் பங்கு விலையானது, என்எஸ்இ-யில் 0.71%% அதிகரித்து, 1070.90 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது, 0.77% அதிகரித்து, 1071.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1837.75 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 944.10 ரூபாயாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+