நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டெக் மகேந்திரா நவம்பர் 1 அன்று இடைக்கால டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நிறுவனம் அதன் இரண்டாவது காலாண்டு அறிக்கையினை வெளியிடலாம் என்றும், அதனுடன் டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பும் வெளியாகலாம்.
தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பினை கொடுத்து வரும் டெக் மகேந்திரா, 2022ம் நிதியாண்டில் 900% டிவிடெண்டினை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இடைக்கால டிவிடெண்ட்
டிவிடெண்ட் குறித்து டெக் மகேந்திரா பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டிற்கான இடைகால டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பினை இயக்குனர் குழுவானது வெளியிடலாம். நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1, 2022 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆக இந்த கூட்டத்தில் இடைக்கால டிவிடெண்ட் பற்றி திட்டமிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விலை நிலவரம்
இந்த இடைக்கால டிவிடெண்டுக்கான தகுதியான பங்குதாரர்களை தேர்வு செய்து நவம்பர் 31 அன்று எக்ஸ் டிவிடெண்டாக மாறலாம்.
கடந்த வெள்ளிக் கிழமையன்று டெக் மகேந்திராவின் பங்கு விலையானது, என்எஸ்இ-யில் 2.50% குறைந்து, 1048.95 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.
இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது, 2.53% குறைந்து, 1047.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1837.75 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 890.10 ரூபாயாகும்.
எவ்வளவு டிவிடெண்ட்?
இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 1 லட்சம் கோடி ரூபாயினை தாண்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் ஒரு பங்குக்கு 900% அல்லது ஒரு பங்குக்கு 45 ரூபாய் டிவிடெண்டினை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் கடந்த ஆண்டினை காட்டிலும், நிகரலாபம் 16% சரிவினைக் கண்டு, 1131.6 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே வருவாய் விகிதம் 24.6% சரிவினைக் கண்டு, 12,708 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
கவனிக்க வேண்டிய காலாண்டு முடிவுகள்
சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஏற்கனவே நாட்டின் முன்னணி ஐடி ஜாம்பவான்கள் சரிவினைக் கண்டுள்ளன. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, மைண்ட் ட்ரீ, ஹெச் சி எல் டெக் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது இரண்டாவது காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளன. இது முந்தைய காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது சற்றே தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் டெக் மகேந்திராவின் முடிவும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
முடிவு எப்படியிருக்கும்?
ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் அதன் வருவாய் விகிதம் குறித்தான கணிப்பில், அதன் வருவாய் விகிதம் கடந்த காலாண்டினை காட்டிலும் 3.4% அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கிறது. இதன் புதிய ஒப்பந்தங்கள் அதிகரித்துள்ளன. இதனால் அதன் மார்ஜின் விகிதம் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாங்கலாமா?
இதற்கிடையில் இப்பங்கினை வாங்கலாம் என மற்றொரு தரகு நிறுவனம் கணித்துள்ளது. இதன் இலக்கு விலையில் 1220 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது.
இதற்கு மத்தியில் வெளியாகவிருக்கும் டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பு மேற்கொண்டு பங்கு விலையினை ஊக்குவிக்கலாம்.


Click it and Unblock the Notifications