ஐடி நிறுவன பங்குகளின் விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது சர்வதேச சந்தையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் செல் ஆஃப் செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக ஐடி நிறுவன பங்குகளின் விலை தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
அந்த வகையில் டெக் மகேந்திராவின் பங்கு விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 40% சரிவினைக் கண்டுள்ளது.
இது 1784 ரூபாயில் இருந்து, 1108 ரூபாயாக சரிவினைக் கண்டு வருகின்றது.
அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
இது குறித்து சந்தை நிபுணர்கள், தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறிய நிலையில் இப்பங்கின் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. டெக் மகேந்திரா நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதமானது மிக அதிகளவில் இருந்து வருகின்றது. இது மீடியம் டெர்மில் 1050 ரூபாயில் வரையில் செல்லலாம். இதனையடுத்த முக்கிய லெவல் 1000 ரூபாயாகவும் நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.
என்ன காரணம்?
டெக் மகேந்திராவின் பங்கு விலையானது மூன்று காரணிகளுக்கு மத்தியில் இந்தளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒன்று அட்ரிஷன் விகிதம். 2வது நாஸ்டாக்கில் தொடர் சரிவு, மூன்றாவது செலவினங்கள் அதிகரிப்பு என காரணிகள் உள்ளன.
முக்கிய விஷயம் இது தான்
டெக் மகேந்திரா பங்கினில் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீட்டு விகிதமானது 39.5%ல் இருந்து, 34.3% ஆக குறைந்துள்ளது. ஆக டெக் மகேந்திரா பங்கின் சரிவுக்கு இதுவும் ஒரு மிக முக்கிய காரணமாகும். அமெரிக்க ஐடி நிறுவனங்களிடம் இருந்து இந்திய ஐடி நிறுவனங்கள் அவுட்சோர்சிங் பணிகளை பெறுவதால், இந்திய ஐடி நிறுவனங்களை பின்பற்றுகின்றனர். இதனால் தான் டெக் மகேந்திரா நல்ல வருவாய் வளர்ச்சியினை கண்டிருந்தாலும், பங்கு சந்தையில் சரிவினைக் கண்டு வருகின்றது.
பங்கினை வாங்கலாம்
சில நிபுணர்கள் டெக் மகேந்திரா பங்கு இன்னும் சற்று குறைந்து ஏற்றம் காணலாம் என்று கூறி வரும் நிலையில், சிலர் இப்பங்கின் விலை டிஸ்கவுண்டில் இருக்கிறது என கூறுகின்றனர். ஆக இன்று வரையில் ஒரு குழப்பமான மன நிலையே இருந்து வருகின்றது. ஏவிபி டெக்னிக்கல் அனலிஸ்ட் இப்பங்கினை 950 ரூபாயினை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு வாங்கலாம் என மதிப்பிட்டுள்ளது.
எவ்வளவு ஏற்றம் காணலாம்?
இப்பங்கின் விலையானது தொடர்ந்த இந்த லெவலிலேயே இருந்து வருகின்றது. ஆக இதிலிருந்து ஏற்றம் காண வாய்ப்புகள் அதிகம். ஆக மீடியம் டெர்மில் இப்பங்கின் விலையானது 10 - 15% ஏற்றம் காணலாம் என கணித்துள்ளனர்.
இன்று என்ன நிலவரம்?
சென்செக்ஸ் 632.13 புள்ளிகள் அதிகரித்து, 54,884.66 புள்ளிகளாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது. நிஃப்டி 182.3 புள்ளிகள் அதிகரித்து, 16,352.3 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
டெக் மகேந்திரா பங்கு விலையானது 4.14% அதிகரித்து, 1123.25 ரூபாயாக என் எஸ் இ-யில் முடிவடைந்துள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications