ஒரே நாளில் 13% உயர்ந்த டாடா குழும பங்கு: BSNL நிறுவனம் தந்த ஒப்பந்தம் தான் காரணமா?

டாடா குழுமத்தை சேர்ந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான தேஜஸ் நெட்வொர்க்ஸ் (Tejas Networks) நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் சுமார் 13% வரை உயர்ந்துள்ளன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்திடமிருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4G நெட்வொர்க் பணிகளுக்காக பெறப்பட்ட ஒப்பந்தமே பங்கு விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 1,537 கோடி ரூபாயாகும். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்திற்கு இந்த உத்தேசிக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கான Letter of Intent-ஐ வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4G மொபைல் நெட்வொர்க்கிற்கான Radio Access Network உபகரணங்கள், அதற்கான துணைப் பொருள்கள் ஆகியவை வழங்கப்படவுள்ளன.

ஒரே நாளில் 13% உயர்ந்த டாடா குழும பங்கு: BSNL நிறுவனம் தந்த ஒப்பந்தம் தான் காரணமா?

இந்த ஒப்பந்தத்திற்கான விரிவான கொள்முதல் ஆணை உரிய காலத்தில் டிசிஎஸ் நிறுவனத்தால் தேஜஸ் நெட்வொர்க்ஸுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து தேசிய பங்கு சந்தையில் தேஜஸ் நெட்வொர்க்ஸ் பங்குகளின் விலை 511.15 ரூபாயிலிருந்து உயர்ந்து, 576.85 ரூபாயாக அதிகரித்தது.

Also Read

கடந்த மே 2025-ல், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்காக 18,685 4G நெட்வொர்க் தளங்களை அமைப்பதற்கான 2,903.22 கோடி மதிப்பிலான கூடுதல் கொள்முதல் ஆணையை டிசிஎஸ் நிறுவனம் பெற்றிருந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, தளங்களை திட்டமிடுதல், பரிசோதித்தல் மற்றும் ஆண்டு பராமரிப்புபோன்ற பணிகளை டிசிஎஸ் மேற்கொள்ள வேண்டும். தற்போதைய தேஜஸ் நெட்வொர்க்ஸின் இந்த புதிய ஆர்டரும் இதன் ஒரு பகுதியாகும்.

Recommended For You

தேஜஸ் நெட்வொர்க்ஸ் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 99.1% அதிக வருவாய் காட்டி தங்களின் மொத்த வருமானம் 402.16 கோடியாக உயர்ந்துள்ளது என அறிவித்தது. வருவாய் அதிகரித்த போதிலும், நிறுவனத்தின் லாபத்தில் தொடர்ந்து அழுத்தம் நீடிக்கிறது. கடந்த ஆண்டு இருந்த 193.87 கோடி நிகர நஷ்டத்துடன் ஒப்பிடும்போது, இந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர நஷ்டம் 202.24 கோடி ரூபாயாக சற்று அதிகரித்துள்ளது. இருந்தாலும் இந்த நிறுவன பங்கு மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 50% உயர்வு கண்டுள்ளது.

டாடா குழுமத்துக்கு உட்பட்ட இந்த நிறுவனத்தில் 50%க்கும் அதிகமான பங்குகள் பிரமோட்டர்கள் வசமே உள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தலா 5% பங்குகளை வாங்கி வைத்திருக்கின்றன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+