தேஜாஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று திடீரென 20% உயர்வு கண்டு 381 ரூபாய் என உச்சத்தை தொட்டது. NEC கார்ப்பரேஷனுடன், 5G MIMO ரேடியோக்களைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த வளர்ச்சி ஏற்பட்டது. தேஜாஸ் நெட்வொர்க்ஸ் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த ஒப்பந்தத்தின் கீழ் NEC-க்காக தரமான 5G MIMO ரேடியோக்களை உற்பத்தி செய்யும்.
அடுத்த தலைமுறை 5G தீர்வுகளை இணைந்து உருவாக்குவது குறித்து, தேஜாஸ் நெட்வொர்க்ஸின் தலைமை இயக்க அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் அர்னோப் ராய் பேசினார். இந்த கூட்டணி வயர்லெஸ் தொழில்நுட்பங்களில் புதுமையாக்கத்தை விரைவுபடுத்தும் எனக் குறிப்பிட்டார். அவர் மேலும், "உலகளாவிய டெலிகாம் நிறுவனங்களுக்கான கேரியர்-கிரேட் தயாரிப்பு மேம்பாட்டில் எங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, NEC உடனான எங்கள் கூட்டு வயர்லெஸ் கண்டுபிடிப்புகளைத் துரிதப்படுத்தும்” என்றார்.

"உலகளாவிய வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதிநவீன 5G/5G-அட்வான்ஸ் தீர்வுகளை உருவாக்க NEC உடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்" என்று ராய் கூறினார். NEC கார்ப்பரேஷனின் உலகளாவிய நெட்வொர்க் பிரிவின் கார்ப்பரேட் மூத்த துணைத் தலைவர் மசயுகி காயஹாரா, இந்த ஒப்பந்தம் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பில் ஒரு முக்கிய அடியை எடுத்து வைப்பதாகத் தெரிவித்தார்.
தேஜாஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், இணைய நிறுவனங்கள், பயன்பாட்டுத் துறை, பாதுகாப்பு மற்றும் அரசு நிறுவனங்களுக்கான திறன் மிகுந்த வயர்லைன் மற்றும் வயர்லெஸ் நெட்வொர்க்கிங் தயாரிப்புகளை வடிவமைத்து தயாரிக்கிறது. இது டாடா குழுமத்தின் ஒரு பகுதியாகும். டாடா சன்ஸ்ஸின் துணை நிறுவனமான பனாடோன் ஃபின்வெஸ்ட், இதன் பெரும்பான்மையான பங்குதாரராக உள்ளது.
தேஜாஸ் நெட்வொர்க்ஸ் 4G மற்றும் 5G ரேடியோ அணுகல் நெட்வொர்க் (RAN) தீர்வுகளை உள்ளடக்கிய பரந்த அளவிலான மொபைல் தயாரிப்புகளை வழங்குகிறது. இதன் தயாரிப்பு பட்டியலில், 3GPP மற்றும் O-RAN தரநிலைகளுக்கு இணங்கக்கூடிய உயர் திறன் கொண்ட 32TR மற்றும் 64TR மாசிவ் MIMO ரேடியோக்கள் இடம்பெற்றுள்ளன.
தேஜாஸ் நெட்வொர்க்ஸ் பங்குகள் ஒரு நாள் வர்த்தகத்தில் 12.52% லாபம் ஈட்டின. இருப்பினும், இந்த ஆண்டு முதல் இதுவரை (YTD) இதன் பங்கு 21.08% குறைந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 40% சரிந்தும், கடந்த 1 ஆண்டில் 51% வீழ்ச்சியடைந்தும் இது வர்த்தகமானது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications