இந்தியாவில் டிஜிட்டல் அம்சம் நுழைய தொடங்கிய கால கட்டத்தில் அதாவது கடந்த 2008ஆம் ஆண்டிலேயே யுவர்ஸ்டோரி என்ற டிஜிட்டல் மீடியாவை தோற்றுவித்தவர்.

யார் இவர்?
யுவர்ஸ்டோரி நிறுவனத்தை தோற்றுவித்தவர் மற்றும் சி.இ.ஓ
கல்வித் தகுதி:
எம்.ஏ (வரலாறு), புனித ஸ்டீபன் கல்லூரி டெல்லி
இவருடைய சிறப்பு:
இந்தியாவில் டிஜிட்டல் அம்சம் நுழைய தொடங்கிய கால கட்டத்தில் அதாவது கடந்த 2008ஆம் ஆண்டிலேயே யுவர்ஸ்டோரி என்ற டிஜிட்டல் மீடியாவை தோற்றுவித்தவர். இந்தியாவில் மட்டுமின்றி உலகின் முன்னணி தொழிலதிபர்கள் தவறாது படிக்கும் இணையதளங்களில் ஒன்றாக இந்த எட்டு ஆண்டுகளில் இவருடைய இணையதளம் உருவாகியுள்ளது.
யுவர்ஸ்டோரி இணையதளத்தை தோற்றுவித்தவர் என்பது மட்டுமின்றி இவர் டைம்ஸ் ஆப் இந்தியா, சி.என்.பி.சி, ஆகியவற்றிலும் நிர்வாகியாக இருந்து அனுபவம் பெற்றவர். மீடியா உலகின் மிகவும் திறமைசாலிகளில் ஒருவராக இருந்ததால் இவருக்கு நாள்தோறும் புகழ் அதிகரித்து கொண்டே இருந்தது.
இவருடைய இணையதளத்தை மாதந்தோறு சுமார் 10 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர். சுமார் 20 மில்லியன் யுவர்ஸ்டோரி பக்கங்கள் பார்வையாளர்களால் மாதந்தோறும் வாசிக்கப்படுகிறது என்பது மிகப்பெரிய சாதனை.


Click it and Unblock the Notifications