
யார் இவர்?
அமேசான் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் இந்திய பிரிவின் மேனேஜர்
கல்வித் தகுதி:
கான்பூர் ஐஐடியில் பி.டெக் படிப்பு மற்றும் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் படிப்பு
விருப்பங்கள்:
அதிகத் தூரம் ஓடுவது இவரது முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்று
இவரது சிறப்பு:
இன்றைய இந்தியாவில் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களாக இருப்பது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள்தான். அவற்றில் ஒன்றின் இந்திய பிரிவின் மேனேஜர் என்பதே இவரது முக்கியச் சிறப்பு அம்சம்.
இந்தியாவில் பிளிப்கார்ட் கொடி கட்டி பறந்து வந்த நிலையில் நுழைந்த அமேசான், மூன்றே ஆண்டுகளில் பிளிப்கார்ட் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடு என்பதை முன்கூடியே கண்டறிந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ், அமித் அகர்வால்தான் இந்தியாவுக்குச் சரியான நபர் என்று தேர்வு செய்து இந்தப் பணியை அவரிடம் ஒப்படைத்தார்.
அமேசான் நிறுவனம் இவருடைய நிர்வாகத்தில் மிகச் சிறந்த இடத்தை எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் என்றே தொழில் துறையினர் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications