அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் ஆன்லைன் மூலம் டிராவல் ஏஜன்சி கொடி கட்டி வந்த நிலையில் இந்தியாவிலும் இதே போன்ற நிறுவனத்தை உண்டாக்க வேண்டும் என்ற ஐடியா இவருக்கு உதித்ததன் விளைவுதான் ஓலா கேப்ஸ்.
கடந்த 2010ஆம் ஆண்டில் பவேஷ் அகர்வால், அன்கிட் பாட்தி என்பவருடன் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். முதலில் மும்பையில் மட்டும் தொடங்கப்பட்ட நிலையில் நான்கே ஆண்டுகளில் அதாவது 2014ஆம் ஆண்டு 100 நகரங்களில் சுமார் இரண்டு லட்சம் கார்கள் இவரது நிறுவனத்தில் கொண்டு வரப்பட்டது.
வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவை ஒன்றை மட்டுமே மனதில் வைத்து இவர் இயங்கியதால் இன்று இந்தியாவின் முன்னணி டிராவல் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. டெல்லி, புனே, சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, சண்டிகார், இந்தூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் ஓலாதான் நம்பர் ஒன் நிறுவனம் என்பது குறிப்பிடத்டக்கது.
கடந்த 2015ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதத்தின் படி இந்நிறுவனத்தின் மதிப்பு $5 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.